Buffoon m Logo Top
Trigger M Logo top
Naane Varuven M Logo Top

1200 வருஷத்துக்கு முன்னாடி மூழ்கிப்போன கப்பல்.. உள்ளே இருந்ததை பார்த்து மிரண்டுபோன ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இஸ்ரேலில் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிப்போன கப்பலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அதன் உள்ளே இருக்கும் பொருட்கள் ஆராய்ச்சியாளர்களையே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

1200 வருஷத்துக்கு முன்னாடி மூழ்கிப்போன கப்பல்.. உள்ளே இருந்ததை பார்த்து மிரண்டுபோன ஆராய்ச்சியாளர்கள்..!

இஸ்ரேலின் வட பகுதியில் உள்ள கடலில் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வால்நட் மரங்களால் கட்டப்பட்ட இந்த கப்பல் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ பைசண்டைன் பேரரசு கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியின் இந்த பகுதியில் தனது பிடியை இழந்து கொண்டிருந்த நேரதில் இஸ்லாமிய ஆட்சி அதன் எல்லையை விரிவுபடுத்தியது. இந்த கப்பல் அந்த காலத்தை சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ancient shipwreck found in northern Israel sea

வர்த்தகம்

இதுபற்றி பேசிய ஹைஃபா பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொல்பொருள் ஆய்வாளரும், அகழ்வாராய்ச்சியின் இயக்குநருமான டெபோரா சிவிகெல், "கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, இப்பகுதியில் மோதல்கள் இருந்தபோதிலும் மத்தியதரைக் கடல் வழியே மற்ற பகுதிகளுடன் வர்த்தகம் நீடித்தது என்பதற்கு சான்றாக அமைந்திருக்கிறது" என்றார்.

பொதுவாக இந்த காலகட்டத்தில் மத்திய தரைக்கடலில் சர்வதேச வர்த்தகம் நிறுத்தப்பட்டதாகவே வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. இந்நிலையில், இந்த கப்பல் கண்டுபிடிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கப்பலில் மூலமாக மத்திய தரை கடல் முழுவதும் வர்த்தகம் நடைபெற்றது உறுதியாகியுள்ளதாகவும் டெபோரா சிவிகெல் தெரிவித்திருக்கிறார். இந்த கப்பல் சுமார் 25 மீட்டர் நீளம் இருந்திருக்கலாம் எனவும் இது சைப்ரஸ், எகிப்து, துருக்கி மற்றும் வட ஆபிரிக்கா வழியாக பயணித்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ancient shipwreck found in northern Israel sea

ஆராய்ச்சி

கப்பலில் கிடைத்திருக்கும் பொருட்கள் இந்த கப்பல் பல நாடுகள் வழியாக பயணித்திருப்பது உறுதியாகியிருப்பதாக டெபோரா சிவிகெல் தெரிவித்திருக்கிறார். இந்த கப்பலில் மீன் சாஸ், பலவிதமான ஆலிவ்கள், பேரீச்சம்பழங்கள் மற்றும் அத்திப்பழங்கள் போன்ற மத்தியதரைக் கடல் உணவுப் பொருட்கள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், மரச்சீப்புகள், வண்டுகள் மற்றும் எலிகள் ஆகியவையும் குடுவைகளில் இருந்திருக்கின்றன. விரைவில் இந்த கப்பல் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டு, விரிவான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அகழ்வாராய்ச்சிக்கு இஸ்ரேல் அறிவியல் அறக்கட்டளை, ஹானர் ஃப்ரோஸ்ட் அறக்கட்டளை மற்றும் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தில் உள்ள கடல்சார் தொல்பொருள் நிறுவனம் ஆகியவை உதவி வருகின்றன.

ISREAL, SHIPWRECK, SEA

மற்ற செய்திகள்