வீட்டை தோண்டும்போது கேட்ட வினோத சத்தம்.. "இதுக்கு மேலயா வீட்டை கட்டி வச்சிருந்தீங்க".. திகைச்சுப்போன மக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெருவில் 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கல்லறை ஒரு வீட்டின் கீழ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வீட்டை தோண்டும்போது கேட்ட வினோத சத்தம்.. "இதுக்கு மேலயா வீட்டை கட்டி வச்சிருந்தீங்க".. திகைச்சுப்போன மக்கள்..!

Also Read | "காதலுக்கு வயசு முக்கியமில்லை".. 37 வருசம் வயசுல மூத்த பெண்ணுடன் திருமணம் செய்துகொண்ட வாலிபர்..!

தென் அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைத்திருக்கிறது பெரு. இந்நாட்டின் தலைநகரமான லிமாவில் வசித்துவரும் ஹிபோலிடோ டிகா (Hipolito Tica) என்பவர் தனது வீட்டை பெரிதுபடுத்த நினைத்திருக்கிறார். இதனால், உள்ளூர் கட்டுமான நிறுவனத்தை அணுகிய டிகா, தனது வீட்டு வேலைகளை ஆரம்பித்துள்ளார். இதனிடையே ஒருநாள் தனது வீட்டின் தளத்தினை தோண்டியிருக்கிறார் டிகா. அப்போது வித்தியாசமாக சத்தம் கேட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தளத்தைனை கவனமாக தோண்ட, உள்ளே இருந்ததை பார்த்து பிரம்மித்து போயிருக்கிறார் அவர்.

காரணம் உள்ளே இருந்தது பழங்கால கல்லறை ஆகும். இதனை தொடர்ந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனே விரைந்துவந்த ஆராய்ச்சியாளர்கள் வீட்டினை பார்வையிட்டுள்ளனர். அப்போது உள்ளே கல்லறை இருப்பதை கண்டறிந்த அவர்கள், உடனடியாக அவற்றை ஆய்வு செய்ய களத்தில் இறங்கியுள்ளனர். உள்ளே விலைமதிப்பு மிக்க உலோகங்களால் போர்த்தப்பட்ட நிலையில் இருந்த கல்லறைக்குள் எலும்புக்கூடு இருந்திருக்கிறது.

Ancient Inca tomb discovered in peru

முன்னணி தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜூலியோ அபாண்டோ இதுபற்றி பேசுகையில்," கல்லறையின் உள்ளே இருந்து பல மூட்டைகள் கண்டறிப்பட்டிருக்கின்றன. 1400களில் மேற்கு தென் அமெரிக்கா முழுவதும் பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த சக்திவாய்ந்த இன்கா பேரரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, புகழ்பெற்றிருந்த ரிரிகாஞ்சோ சமுதாயத்தைச் சேர்ந்த மதிப்புமிக்க ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஏனெனில் விலையுர்ந்த பொருட்களை பொதுவாக பெரும் தலைவர்கள் இறக்கும்போது கல்லறையில் வைப்பதை அம்மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த கல்லறையில் இருந்தும் அவ்வாறான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன" என்றார்.

என்ன சொல்றதுன்னே தெர்ல

இந்நிலையில், இந்த வீட்டின் உரிமையாளர் டிகா இதுபற்றி பேசுகையில்," எனது வீட்டை பெரிதுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில்தான் இதனை கண்டுபிடித்தோம். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பழங்கால கல்லறை எனது வீட்டிற்குள் இருந்திருப்பது எங்களது குடும்பத்திற்கான பெருமையாகும்" என்றார்.

டிகாவின் வீட்டில் பழங்கால கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவரது அண்டை வீடுகளிலும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Also Read | செல்போனால் வந்த அண்ணன் தம்பி சண்டை.. கோவத்துல அண்ணன் செஞ்ச காரியம்.. நடுநடுங்கிய உறவினர்கள்.. சென்னையில் பரபரப்பு...!

ANCIENT INCA TOMB, PERU

மற்ற செய்திகள்