'என்னா டிராஃபிக்!'.. 'இனி பூ பாதை இல்ல; சிங்கப் பாதைதான்!'.. வாகன ஓட்டியின் 'வேறலெவல்' ஐடியா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தோனேஷியாவின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாததால், வீட்டிலேயே நபர் ஒருவர் மினி ஹெலிகாப்டர் உருவாக்கியுள்ளார்.

'என்னா டிராஃபிக்!'.. 'இனி பூ பாதை இல்ல; சிங்கப் பாதைதான்!'.. வாகன ஓட்டியின் 'வேறலெவல்' ஐடியா!

போக்குவரத்து நெரிசலால் தினமும் நொந்துபோய்க் கொண்டிருந்த ஜூஜூன் ஜூனேடி,என்கிற இந்தோனேஷிய குடிமகன் ஒருவர், சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நொந்து நூடுல்ஸ் ஆவதை முற்றிலுமாக வெறுத்துப் போயுள்ளார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் யோசித்துள்ளார்.

அப்படித்தான் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கபாலத்தில் ஒரு யோசனை உண்டாகியுள்ளது. அதன்படி தன்னுடைய ஓய்வு நேரங்களை செலவிட்டு, பல டுடோரியல் வீடியோக்களை பார்த்து, பழைய ஸ்கிராப்களில் இருந்து உதிரி பாகங்களை பெற்று, 18 மாத உழைப்பில்   ரூ.1,52,000 சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கிவிட்டார்.

சுமார் 26 அடி, அதாவது 8 மீட்டர் நீளமுள்ள, பெட்ரோல் கொண்டு இயங்கும் சாப்பரை தயாரிக்க ஜூனேடியின் இளம் மகனும், அவனது நண்பனும் உதவியுள்ளனர். ஆனால் ஜூனேடி இந்த ஹெலிகாப்டரை பறக்க வைத்து பார்த்த பின்னரே தனது வெற்றியைக் கொண்டாட உள்ளார்.

TRAFFIC, INDONESIA, HELICOPTER