'குண்டு வெடிக்குறதுக்கு கொஞ்சம் முன்னாடி...' 'ஒரு காரில் இருந்து வந்த ஆடியோ சத்தம், அதில்...' - கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்காவில் நடந்த சோகம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் கிறிஸ்துமஸ் தினமான இன்று குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நாஷ்வில்லே நகரத்தில் இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அப்போது, அங்கே இருந்த குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில் 3 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த வெடிவிபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து ஒரு ஆடியோ ஒலித்து கொண்டிருந்ததுள்ளது. அதில் 'இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வெடிகுண்டு வெடிக்கும். இதை கேட்பவர்கள் உடனே இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்' என்று கூறி கொண்டிருந்துள்ளது.
பேசிகொண்டிருந்த ஒலி நின்ற அடுத்த சில நிமிடங்களில் காரில் இருந்து வெடிபொருள் வெடித்தது. இந்தக் காட்சிகள் அந்த வீடியோவில் வெளியாகியுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது நாஷ்வில்லே சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து கூறிய நாஷ்வில்லே நகர போலீஸ், 'ஆடியோ ஒலித்துக் கொண்டிருக்கும் கார் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே நாங்களும் எச்சரிக்கை விடுக்கும் பணியில் இறங்கி, மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்களை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தினோம்.
இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை. தகுந்த நேரத்தில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. காயமடைந்த மூன்று பேரும் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை' எனக் கூறியுள்ளது.
கிருஸ்துமஸ் தினத்தன்று நடந்த சம்பவம் அமெரிக்க மக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது எனலாம். கூடுதலாக எஃப்.பி.ஐ (FBI) உள்ளிட்ட பல்வேறு விசாரணை ஏஜென்சிகள் குண்டு வெடிப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.
மற்ற செய்திகள்