VIDEO: மனுசங்க மட்டும் தான் பாடுவீங்களா...! 'நாங்களும் பாடுவோம்ல...' - பாடும் புலியை காண அலைமோதும் மக்கள் கூட்டம்...' - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யாவில் பர்னால் எனும் ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் 8 மாதமே ஆன புலி ஒன்று பாடும் வகையில் குரல் எழுப்புவதால், அதனை ஆர்வத்துடன் காண பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.

VIDEO: மனுசங்க மட்டும் தான் பாடுவீங்களா...! 'நாங்களும் பாடுவோம்ல...' - பாடும் புலியை காண அலைமோதும் மக்கள் கூட்டம்...' - வைரல் வீடியோ...!

புலி என்றால் கம்பீரமான குரலிலும் பிறரை அச்ச படுத்தக்கூடிய புலிகளை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் ரஷ்யாவில் உள்ள பர்னால் எனும் ஒரு ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் எனும் பெயர் கொண்ட எட்டு மாதமே ஆன புலி ஒன்று வழக்கமாக உறுமும் புலிகளைப் போல் இல்லாமல் பாடுவது போல குரல் எழுப்பி வருகிறதாம்.

பிறந்தது முதல் இவ்வாறு தான் இந்த புலி பாடுவதாக அந்த விலங்கியல் பூங்காவின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வித்தியாசமான குரலில் பாடுவது போன்று ஒலி எழுப்பக் கூடிய இந்தப் எட்டு மாதமே ஆன ஷெர்ஹான் எனும் புலியை காண்பதற்கு அதிகளவில் மக்கள் கூட்டம்  குவிந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்