கத்துக்கிட்ட 'மொத்த வித்தைய' இறக்கியிருக்காங்க...! 'ஐஎஸ்-கே' ஸ்லீப்பர் செல்கள் யாரோட 'லிங்க்' வச்சுருக்காங்க தெரியுமா...? - 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட 'ஆப்கான்' முன்னாள் துணை அதிபர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபானும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தங்களுக்குள் தொடர்பு இல்லையென கூறி உலகை ஏமாற்றி வருவதாக ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தனை கைப்பற்றியுள்ள தாலிபான் தீவிரவாத அமைப்பு ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சி அமைக்கும் நிலைக்கு சென்றுள்ளது. அவர்களின் முன்னாள் ஆட்சியை மனதில் கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானில் இருந்து தினமும் வெளியேறி வருகின்றனர். இதுவரை காபூலில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று (26-08-2021) காபூல் விமான நிலையமருகே தற்கொலை படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 72 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த செயலுக்கு தாலிபான் தீவிரவாத அமைப்பும் கண்டித்து, தங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென அறிவித்துள்ளது.
ஆனால், ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தாலிபான் கூறுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தலிபான்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தனது ட்வீட்டர் பதிவிட்டுள்ளார்.
அதில், தாலிபானின் எஜமானரே ஐஎஸ்ஐஎஸ் தான். அவர்களிடம் கற்றுக் கொண்டதை தான் வெளிப்படுத்துகிறார்கள். இப்போது வேண்டுமானால் எங்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ்-க்கும் தொடர்பில்லை என்று கூறலாம்.
ஆனால், ஐஎஸ்-கே ஸ்லீப்பர் செல்களுடன், தாலிபான்கள் மற்றும் ஹக்கானி தீவிரவாத குழுவினர் தொடர்பில் இருப்பதற்கு எங்களிடம் வலுவான ஆதாரம் உள்ளது' என பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்