“அந்த மருந்து என்ன ஒன்னும் பண்ணல.. ஏன்னா எனக்குதான் தொற்று இல்லயே?.. அதனால” - மீண்டும் ‘டிரம்ப்’ எடுத்த ‘அதிரடி’ முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்மலேரிய எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை எடுப்பதை, தான் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையின் தீவிர ஆதரவாளரான டிரம்ப், அதை எடுத்துக் கொண்டதால் தமக்கு எவ்வித பக்கவிளைவோ உடல் நலக் கேடோ ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். இரண்டு வாரமாக அந்த மருந்தினை எடுத்துக்கொள்வதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
முன்னதாக மருத்துவர்களும், அந்நாட்டின் உயரதிகாரிகள் பலரும் “பருத்த உடலமைப்பைக் கொண்ட டிரம்ப் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்வதால் அவரது உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்” என்று கூறிவந்தனர்.
இந்த சூழலில், இதுபற்றி பேசிய டிரம்ப், தனக்கு கொரோனா தொற்றோ மலேரிய தொற்றோ இல்லை என்பதாலும், எந்த பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என்பதாலும், தற்போது இந்த மருந்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்