‘வேலை, வருமானம் இல்லை’.. விடுதி வாடகை கொடுப்பதற்காக, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ள ‘கல்லூரி’ மாணவிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பண நெருக்கடி உண்டானதை அடுத்து மாணவிகள் வாடகை செலுத்துவதற்கு தொகை இல்லாததால் தங்கள் ஆடைகளை விற்பனை செய்து பணம் திரட்டி வரும் சூழல் உண்டாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பிரிட்டனை சேர்ந்த சில மாணவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து வந்துள்ள நிலையில் பலரும் தாங்கள் அல்லது தங்களது பெற்றோர் வேலைகளை இழந்து விட்டதாக பல்கலைக்கழகத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 19 வயதான ரோவன் மடோக் என்கிற மாணவி கார்டிப்ஃ நகரில் மட்டும் 60 முறை வேலை கேட்டு மனு அளித்துள்ளதாக தெரிகிறது. தற்போது தான் தங்கியிருக்கும் மாணவர்களுக்கான இல்லத்தில் வாடகை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தற்போதைய நிதி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தனது உடைகளை அலைபேசி செயலி மூலம் விற்பனை செய்து பணம் தருவதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், உண்மையில் நமக்கு விருப்பமில்லாத உண்மையில் நமக்கு பிடித்தமான பொருட்களை விற்பனை செய்வது கஷ்டமான காரியம்தான். ஆனால் வேறு வழியில்லை. அடுத்த மாதம் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் இதர கட்டணங்களான 400 பவுண்டுகளில் 50 பவுண்டுகள் வரை சேமித்துள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தன் சக மாணவிகளும் தங்களின் பணத் தேவைக்காக இப்படி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது தந்தை பணி நீக்கம் செய்யப்படும் அபாயத்தில் இருந்த பின் பெற்றோரிடம் உதவி கேட்க தான் முயற்சி செய்யவில்லை என்றும் ஒருவேளை தனது தந்தை பணி நீக்கம் செய்யப்பட்டால் தனக்கான அனைத்து தேவைகளும் தானே தேடிக்கொள்ள வேண்டியது வரும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்