கடலில் மிதந்து வந்த பாட்டில்.. உள்ளே இருந்த பேப்பரை பார்த்துட்டு சர்ப்ரைஸான நபர்.. இப்படியெல்லாம் கூட நடக்குமா..?!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் வாக்கிங் சென்ற நபர் கடற்கரையில் பாட்டில் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். அதனுள் இருந்த செய்தி அவரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கடலில் மிதந்து வந்த பாட்டில்.. உள்ளே இருந்த பேப்பரை பார்த்துட்டு சர்ப்ரைஸான நபர்.. இப்படியெல்லாம் கூட நடக்குமா..?!

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்ட இறந்தவரின் சடலம்.. திடுக்கிடும் பின்னணி.!

சுற்றுலா

அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தை சேர்ந்தவர் பிரோன் மில்லர். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் பஹாமாஸ்க்கு விடுமுறை நாட்களை கழிக்க சென்றிருக்கிறார். தினந்தோறும் கடற்கரையில் வாக்கிங் செல்வதை மில்லர் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒருநாள் பாட்டில் ஒன்றை பார்த்திருக்கிறார் மில்லர். அதனுள் காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருப்பதை அவர் பார்க்க, அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆச்சர்யம்

அவசரமாக அதனை திறந்து பேப்பரை படித்தவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அதில் 6 பெயர்கள், Co-ordinates ஆகியவை எழுதப்பட்டு இருந்திருக்கின்றன. இதனால் உத்வேகம் அடைந்த மில்லர் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார். சில நாட்களுக்கு பிறகு தான் பாட்டில் குறித்த உண்மையே அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

American finds Nova Scotian message in a bottle on Bahamian beach

கடந்த 2016 ஆம் ஆண்டு கனடாவின் நோவா ஸ்காட்டியா பகுதியை சேர்ந்த மீனவரான பியர்ஸ் அட்வுட் கடலுக்குள் பயணம் செய்திருக்கிறார். அவருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் அந்த கப்பலில் இருந்திருக்கின்றனர். அப்போது, மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளையில் தங்களது பெயரை பேப்பரில் எழுதி, அதனை கடலில் வீசலாம் என தெரிவித்திருக்கிறார். அதன்பின்னர், மது குடுவைக்குள் பெயர்கள் மற்றும் Co-ordinates எழுதப்பட்ட பேப்பரை வைத்து கடலில் வீசியிருக்கின்றனர்.

American finds Nova Scotian message in a bottle on Bahamian beach

Images are subject to © copyright to their respective owners.

நீரோட்டம்

அந்த பாட்டிலை தான் 7 வருடங்கள் கழித்து மில்லர் பஹாமாஸ் கடற்கரையில் கண்டுபிடித்திருக்கிறார். இதுபற்றி பியர்ஸ் அட்வுட் கேள்விப்பட்டபோது அவரால் இதனை நம்பவே முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் இதனை அறிந்து மிகுந்த ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர். இதற்கு காரணமும் இருக்கிறது. அந்த பகுதியில் கடல் நீரோட்டம் அதிகம் இருப்பதாக கூறும் வானிலை ஆய்வாளர்கள் இந்த பாட்டில் கிழக்கு நோக்கி வட அட்லாண்டிக் நீரோட்டத்துடன் வடக்கு அட்லாண்டிக்கின் மையத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து கேனரி நீரோட்டம் காரணமாக வட கிழக்கு அட்லாண்டிக் பகுதிக்கு வந்திருக்க வேண்டும் என்கின்றனர்.

American finds Nova Scotian message in a bottle on Bahamian beach

Images are subject to © copyright to their respective owners.

கிட்டத்தட்ட 7 வருடங்கள் கடலில் மிதந்த இந்த பாட்டில் சேதமடையாமல் இருப்பதும் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

Also Read | தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா.. மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த பிரபலங்கள்!

AMERICAN, NOVA SCOTIAN MESSAGE, BOTTLE, BAHAMIAN BEACH

மற்ற செய்திகள்