VIDEO : '75 வயது' முதியவரை... பிடித்து கீழே தள்ளிய 'அமெரிக்க' போலீசார்... "கீழ விழுந்ததுல அவருக்கு"... மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்திய 'சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடந்த மாதம் 25 - ம் தேதியன்று கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை கடையில் கள்ள நோட்டு கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் அப்பகுதி போலீசார் ஜார்ஜின் கழுத்தில் பலமாக அழுத்தியதில் ஜார்ஜ் உயிரிழந்தார்.

VIDEO : '75 வயது' முதியவரை... பிடித்து கீழே தள்ளிய 'அமெரிக்க' போலீசார்... "கீழ விழுந்ததுல அவருக்கு"... மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்திய 'சம்பவம்'!

இந்த படுகொலைக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். பல இடங்களில் வன்முறையாகவும் வெடித்தது. இந்த கொலைக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளிலுள்ள மக்களும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஜார்ஜ் கொலை தொடர்பாக நான்கு போலீசார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா முழுவதும் நடக்கும் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் போராட்டக்காரர்களிடையே அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நியூயார்க் பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது தடை உத்தரவை அமல்படுத்த வேண்டி அப்பகுதியில் சுமார் 100 போலீசார் போராட்டம் நடக்கும் இடம் நோக்கி சென்றனர்.

அப்போது போலீசாருக்கு முன்னே வந்த சுமார் 75 வயதுமிக்க நபரை போலீசார் கீழே தள்ளியுள்ளனர். நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவரின் தலையில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. இருந்தபோதும், அதனை கண்டு கொள்ளாமல், முதியவருக்கு எந்த உதவியும் செய்யாமல் போலீசார் கடந்து சென்றனர். இந்த அனைத்து சம்பவங்களையும் புஃபலோ நகரின் உள்ளூர் ரேடியோவான WBFO -வின் பத்திரிகையாளர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த வீடியோ, மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்