"அழகா இருக்கு, எனக்கு அது ரொம்ப புடிச்சு போய்டுச்சு.." வியப்பை ஏற்படுத்தும் பெண்ணின் 'Love Story'..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவைச் சேர்ந்த 50 பெண் ஒருவருக்கு உள்ள வினோதமான ஈர்ப்பும், அது பற்றி அவர் பேசி உள்ள வீடியோ ஒன்றும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

"அழகா இருக்கு, எனக்கு அது ரொம்ப புடிச்சு போய்டுச்சு.." வியப்பை ஏற்படுத்தும் பெண்ணின் 'Love Story'..

மனிதர்களுக்கு மாறி மாறி ஒருவர் மீது காதலும் அன்பும், ஈர்ப்பும், நாட்டமும் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அது போலவே சில மனிதர்களுக்கு, உயிரற்ற பொருட்கள் மீதும் ஈர்ப்பு மற்றும் ஒருவித நாட்டம் ஏற்படும்.

நம்மைச் சுற்றி இருக்கும் ஏராளமான உயிரற்ற பொருட்கள் மீது அளவுக்கு அதிகமான அன்பு ஏற்பட்டு, அதனுடன் இணைந்து வாழவும் சிலர் நினைப்பார்கள்.

உயிரற்ற பொருட்கள் மீது ஈர்ப்பு

அப்படி ஒருவர் தான், அமெரிக்காவைச் சேர்ந்த 50 வயது பெண்ணான எரிகா லாப்ரி. வில்வித்தை வீராங்கனையான இவருக்கு உயிரற்ற பொருட்கள் மீது ஈர்ப்பு உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு, பாரிஸில் உள்ள ஈஃபில் டவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார் எரிகா. அது மட்டுமில்லாமல், தனது பெயரைக் கூட அவர் எரிகா ஈஃபில் என அவர் மாற்றிக் கொண்டார். இந்த சம்பவம் அந்த சமயத்தில் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் எரிகா தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

America woman physically attracted to red fence

ரொம்ப புடிச்சு போயிடுச்சு..

ஒரு பகுதியில் உள்ள சிவப்பு வேலி ஒன்றின் அருகே நிற்கும் எரிகா, அதன் மீது தனக்கு அதிக ஈர்ப்பு உள்ளதாகவும் அது மிகவும் பிடித்து விட்டதாகவும் வீடியோ ஒன்றில் பேசுகிறார். அதில், "இங்கு இப்படி ஒரு வேலி இருக்கும் என நான் நினைக்கவே இல்லை. சில நேரம் இந்த வேலிகள் எனக்கு மிகவும் ஆபத்தான ஒன்று என்று நான் கருதுவதால் இவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனால், தற்போது இப்படி ஒரு சிறப்பான வேலியை பார்த்ததும் எனக்கு மிகவும் பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த வேலி குறித்து இன்னும் அதிகம் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் " என எரிகா தெரிவித்துள்ளார்.

America woman physically attracted to red fence

எரிகாவின் வேலி மீதுள்ள காதல் தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாகவே, இது போன்ற உயிரற்ற பொருட்கள் மீதான ஈர்ப்பு தொடர்பான நிறைய செய்திகள் நம்மைச் சுற்றி வலம் வந்து கொண்டே இருக்கிறது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 737 போயிங் விமானத்தின் மீது அதிக ஈர்ப்பு மற்றும் நாட்டம் இருந்ததாக செய்தி வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ERIKA LABRIE, EIFFEL TOWER, LOVE

மற்ற செய்திகள்