"மொத்தமா 560 உடல்கள்.." உடல் உறுப்புகளை வைத்து தாய், மகள் செய்த காரியம்.. அமெரிக்காவை நடுங்க வைத்த பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இறுதி சடங்கு அமைப்பின் உரிமையாளர் ஒருவர் இத்தனை நாட்கள் செய்து வந்ததாக வெளியாகி உள்ள தகவல், பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

"மொத்தமா 560 உடல்கள்.." உடல் உறுப்புகளை வைத்து தாய், மகள் செய்த காரியம்.. அமெரிக்காவை நடுங்க வைத்த பின்னணி!!

Also Read | "மகளிர் மட்டும்".. பிங்க் நிறத்தில் பெட்ரோல் பங்க்.. முதல் நாளில் இலவச பெட்ரோல்!!.. பட்டையை கிளப்பும் திட்டம்!!

அமெரிக்காவின் கொலராடோவின் மாண்ட்ரோஸ் அருகே இறுதி சடங்கு செய்யும் தொழில் ஒன்றை செய்து வந்துள்ளார் மேகன் ஹெஸ். இவர் இறுதி சடங்கு அமைப்புடன் சேர்ந்து உடல் உறுப்பு தான மையம் ஒன்றையும் அவரது தாயான ஷெர்லி கோச் என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

அப்படி ஒரு சூழலில் தான், ஹெஸ் மற்றும் ஷெர்லி ஆகியோர் செய்து வந்த மோசடி தொடர்பான விஷயம் பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.

அதாவது, தங்களின் இறுதி சடங்கு இல்லத்திற்கு வரும் உடல்களை மோசடியான மற்றும் போலி நன்கொடையாளர் படிவங்களை பயன்படுத்தி திருடி அதனை வெளியே விற்று வந்தாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதயங்கள், சிறுநீரகங்கள் மற்றும் தசை நாண்கள் உள்ளிட்ட உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைக்காக விற்பது அமெரிக்காவில் சட்ட விரோதமானது ஆகும். மாறாக தனமாக அவை வழங்கப்பட வேண்டும்.

America woman and her mother involved in forgery with bodies

ஆனால் அதே வேளையில், ஆராய்ச்சி அல்லது கல்வியில் பயன்படுத்துவதற்கு தலைகள், கைகள் மற்றும் முதுகெலும்புகள் போன்ற உடல் பாகங்களை விற்பது கூட்டாட்சி சட்டத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. இதை பயன்படுத்தி தான் மேகன் ஹெஸ் இந்த உடல் பாக விற்பனையை செய்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அத்துடன் போலி ஆவணங்கள் மூலம் தானமாக உறுப்புகளை விற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது வெளியில் தெரியாமல் பல ஆண்டுகள் இருந்து வந்ததாகவும் 2016 - 2018 ஆம் ஆண்டு ராய்ட்டர்ஸ் புலனாய்வுத் தொடரால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஹெஸ்ஸிடம் இருந்து கால்கள், தலைகள் உள்ளிட்ட உடல் பாகங்களை பெற்று கொண்ட நிறுவனங்களுக்கு அவை மோசடியாக பெறப்பட்டது என்பது பின்னர் தான் தெரிய வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், நூற்றுக்கணக்கான குடும்பங்களிடம் இருந்து சுமார் 560 உடல்கள் தகனம் செய்யப்பட்டது என பொய் சொல்லி உடலை பின்னர் வெட்டி விற்றுள்ளதும், பதிலாக வேறு சாம்பலை கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

America woman and her mother involved in forgery with bodies

மேகன் ஹெஸ் மற்றும் அவரது தாயார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பல காலமாக ஒப்புக் கொள்ளாத அவர்கள் சமீபத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தற்போது ஹெஸ்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவரது தாய்க்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Also Read | 88 வருட வரலாற்றில் முதல் முறை.. இந்திய அணியில் இடம்பிடித்த கையோடு.. உனத்கட் படைத்த வரலாற்று சாதனை!!

AMERICA WOMAN, MOTHER, FORGERY

மற்ற செய்திகள்