அல்கொய்தா தலைவரின் இந்த பழக்கம் தான் தாக்குதலுக்கே காரணமாம்.. கச்சிதமா பிளான் போட்ட அமெரிக்க படை.. என்ன நடந்துச்சு?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரிக்கு இருந்த ஒரு பழக்கம் தான் தாக்குதலுக்கு காரணமாக அமைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அல் ஜவாஹிரி
உலகையே ஸ்தம்பிக்க செய்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு ஒசாமா பின் லேடனுக்கு உதவியாக இருந்தவர் அல் ஜவாஹிரி என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற இரட்டை கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவே, பின்னாளில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்கா படைகளை குவிக்க முக்கிய காரணமாகவும் அமைந்தது. இந்த நாட்களில் அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனுக்கு பக்கபலமாக அல் ஜவாஹிரி இருந்ததாக கூறப்படுகிறது.
அதிரடி தாக்குதல் மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க படையினரால்
பின்லேடன் கொல்லப்பட்டார். அப்போது, அல்கொய்தாவின் தலைவரானார் அய்மான் அல் ஜவாஹிரி. அதுமுதல் அவரை கண்டறிய பல ரகசிய திட்டங்களை அமெரிக்க அரசு செயல்படுத்திவந்தது.
காரணம்
அல்கொய்தாவின் தலைவராக இருந்த அல் ஜவாஹிரி அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதனிடையே ஜவாஹிரி ஆப்கனிஸ்தானில் இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அவர் வசித்ததாக சொல்லப்பட்ட வீட்டை சிறப்புப்படை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இதனையடுத்து pattern of life intelligence என்னும் அல் ஜவாஹிரியின் அன்றாட வாழ்க்கை குறித்த அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டிருக்கின்றன. அப்போதுதான் தினமும் அதிகாலையில் அவர் வீட்டின் பால்கனியில் தனிமையில் அமர்ந்து நாளிதழ்களை வாசிப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்த தகவல் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் ஜவாஹியின் வீடு அமைந்திருக்கும் இடத்தை இதன்மூலம் உறுதி செய்த அமெரிக்க சிறப்பு படையினர் தாக்குதலை திட்டமிட்டிருக்கின்றனர்.
அறிவிப்பு
இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அல் ஜவாஹிரியின் வீட்டில் ட்ரான் தாக்குதலை நடத்தியிருக்கிறது அமெரிக்கா. இதில் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இதுகுறித்து பேசிய அவர்,"நீதி வழங்கப்பட்டுள்ளது. அல் ஜவாஹிரி இப்போது இல்லை" என்றார். இந்நிலையில், இந்த தாக்குதலை அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார்.
Also Read | தமிழகத்தில் ரெட் அலெர்ட்.. நாளைக்கும் இந்த மாவட்டங்கள்ல கனமழை இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
மற்ற செய்திகள்