கண்ணீரை துடைக்க நேரமில்லாம வாட்டிய ‘கொடூர’ கொரோனா.. 2 மாசம் கழிச்சு ‘முதல்முறையா’ அமெரிக்காவுக்கு ஆறுதல் தந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
சீனாவுன் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை அந்நாட்டில் 17 லட்சத்துக்கும் அதிமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்பு முதல்முறையாக அங்கு வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 29ம் தேதி அமெரிக்காவில் கொரோனாவுக்கு 497 பேர் பலியாகினர். அதன் பின்னர் அங்கு கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் என்ற கணக்கில் இருந்தது.
ஆனால் நேற்று (25.05.2020) 505 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இது கடந்த 2 மாதங்களில் பதிவான மிகக்குறைவான பலி எண்ணிக்கை என கூறப்படுகிறது. இந்த விவரங்களின் மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இது அந்நாட்டு மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
மற்ற செய்திகள்