"என்ன மன்னிச்சுக்கோ".. விமான விபத்துக்கு முன் மனைவிக்கு கணவர் அனுப்பிய கடைசி மெசேஜ்!!.. மனம் நொறுங்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்விமான விபத்திற்கு முன்பாக கணவர் ஒருவர் அவரது மனைவிக்கு அனுப்பிய கடைசி மெசேஜ் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் மனம் நொறுங்க வைத்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
அமெரிக்காவின் வெஸ்ட்செஸ்டர் கவுண்டியில் ஒரு சிறிய விமானம் ஒன்று சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியதாக தெரிகிறது.
மேலும் இந்த விமானத்தை இயக்கிய விமானி, பயணி என இருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர்கள் க்ளீவ்லேண்ட் என்னும் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கும் நிலையில், இறுதி சடங்கிற்காக சென்று விட்டு வீடு திரும்பிய சமயத்தில் இந்த விபத்து நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
Images are subject to © copyright to their respective owners.
ஒரு எஞ்சினை கொண்டு இயக்கப்படும் பீச்கிராஃப்ட் A 36 என்ற விமானம் தான் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. அப்படி இருக்கையில், மாலை சுமார் 6 : 15 மணியளவில் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு விபத்து நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள வடக்கு கோட்டை நகரத்தின் அருகே குக்கிராமமான அர்மோங்கில் உள்ள அலுவலக பூங்காவிற்கு பின்னால் உள்ள காடுகளில் விபத்தில் சிக்கிய விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்த நபர் கடைசியாக தனது மனைவிக்கு அனுப்பிய மெசேஜ், இணையத்தில் அதிக வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் நடந்த இந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் பெயர் போருச் டாப். மேலும் இந்த விமானத்தில் பயணியாக பயணம் செய்தவர் பெஞ்சமின் சாஃபெட்ஸ். இவர் தனது மனைவிக்கு மாலை சுமார் ஐந்தரை மணியளவில் மெசேஜ் ஒன்று அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
அந்த மெசேஜில், "நான் உன்னையும் குழந்தைகளையும் நேசிக்கிறேன். நான் செய்த அனைத்திற்கும் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எஞ்சின்கள் செயலிழந்து விட்டது. கடவுளை போற்றுங்கள்" என குறிப்பிட்டு மெசேஜ் அனுப்பி உள்ளார்.
ஓஹியோவின் பீச்வுட்டில் மனைவி ஸ்மடார் மற்றும் 7 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார் பெஞ்சமின் சாஃபெட்ஸ். விமானத்தில் கோளாறு ஏற்பட்டதும் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு அவர் அனுப்பியுள்ள மெசேஜ் தற்போது பலரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
மற்ற செய்திகள்