RRR Others USA

அதிவேகத்தில் வந்து ஜன்னலைத் துளைத்த புல்லட்.. ஜஸ்ட் மிஸ்!! இளைஞரை காப்பாற்றிய ஹெட் ஃபோன்.. த்ரில் சம்பவம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக அதிர்ஷ்டம் பற்றி நாம் பேசும் போது, எல்லோருக்கு அவ்வளவு சீக்கிரத்தில் அது அமைந்து விடாது என்று தான் பெரும்பாலானோர் குறிப்பிடுவார்கள்.

அதிவேகத்தில் வந்து ஜன்னலைத் துளைத்த புல்லட்.. ஜஸ்ட் மிஸ்!! இளைஞரை காப்பாற்றிய ஹெட் ஃபோன்.. த்ரில் சம்பவம்

பணம், பொருள் என இல்லாமல், உயிர் விஷயத்திலும் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருந்து ஒருவர் பிழைத்துக் கொள்கிறார் என்றால், அவருக்கு அருகேயே அதிர்ஷ்டம் மல்லாக்க படுத்துக் கிடக்கிறது என்று தான் நாம் சொல்ல வேண்டும்.

தன்னுடைய ஹெட் ஃபோனை காதில் வைத்திருந்த காரணத்தால், 18 வயது இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்ததாக அவரே வெளியிட்ட போஸ்ட் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

உயிரைக் கைப்பற்றிய ஹெட் ஃபோன்?

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி ரெட்டிட் கணக்கு வைத்திருக்கும் இளைஞர் ஒருவர் தன்னுடைய கணக்கில் வெளியிட்ட பதிவில், "இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் வணக்கம். Razer நிறுவனத்தில்  பணிபுரியும் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். காலை சுமார் 10:30 மணியளவில், என்னுடைய படுக்கை அறை ஜன்னல் வழியாக வந்த புல்லட் ஒன்று, என் தலையில் இருந்த ரேசர் ஹெட் ஃபோனைத் தாக்கியது. அது நல்ல தரத்தில் உருவாக்கப்பட்ட ஹெட் ஃபோன்  என்பதால் நான் பிழைத்துக் கொண்டேன். இல்லையென்றால், நான் 18 வயதில் இறந்ததாக இந்த உலகம் செய்தியை அறிந்திருக்கும்.

america headphone allgedly saved 18 yr old boy life from bullet

ஜன்னல் வழியா வந்துச்சு

அதே போல, எனது மறைவால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வேதனை அடைந்திருப்பார்கள். எனது நண்பர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது வந்த தோட்டா, என் ஜன்னல் வழியாக வந்து, ஹெட் ஃபோனில் பட்டு திசை திரும்பி, சுவற்றில் இடித்து, பின்னர் என் படுக்கையில் வந்து விழுந்தது. பிறகு, போலீஸ் வந்து அதனை எடுத்து செல்லும் வரை நாங்கள் காத்திருந்தோம்" என குறிப்பிட்டிருந்தார்.

கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

18 வயது இளைஞரின் பதிவு, அதிகம் வைரலாகி இருந்தது. அது மட்டுமில்லாமல், ரேசர் நிறுவனம், புதிய ஹெட் ஃபோன் ஒன்றை மாற்றாக தருவதாக அறிவித்துள்ளது. ஆனால், அதனை அந்த இளைஞர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், ஹெட் ஃபோன் ஒன்று தோட்டா தலையில் தாக்காமல் காத்துக் கொண்டது பற்றி, பலரும் கேள்விகளை எழுப்பியும் வருகின்றனர்.

ஆனால், அதே வேளையில் ரேசர் ஹெட் ஃபோன்களின் ஹெட் ஸ்ட்ராப்பில் உலோக பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது பற்றியும் சிலர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

HEADPHONES, VIRAL STORY, SAVED LIFE

மற்ற செய்திகள்