"போச்சே போச்சே.." சல்லி சல்லியாய் நொறுங்கிய கார்.. நொந்து நூடுல்ஸ் ஆன உரிமையாளர்.. "இவ்ளோ விலையா?."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுமார் 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய கார் ஒன்று, சில தினங்களிலேயே விபத்தில் சிக்கியுள்ள சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது.

"போச்சே போச்சே.." சல்லி சல்லியாய் நொறுங்கிய கார்.. நொந்து நூடுல்ஸ் ஆன உரிமையாளர்.. "இவ்ளோ விலையா?."

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ராபர்ட் குயாரினி என்பவர், சமீபத்தில் 704,000 டாலர் செலவு செய்து (இந்திய மதிப்பில் சுமார் 5 கோடி ரூபாய்) Ford GT காரை வாங்கி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், ஏலம் ஒன்றில் இந்த காரை அவர் வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்துக்குள் ஆன Ford GT..

2006 Heritage Edition Ford GT காரின் உரிமையாளராக பெருமையுடன் விளங்கி வந்த ராபர்ட்டிற்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை. மிக மிக வேதனையான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. காரை அவர் வாங்கிய கொஞ்ச நாட்களிலேயே ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள் ஆக்கி உள்ளது.

america florida man crashes his 5 crore ford gt car

ஏங்கிய நெட்டிசன்கள்

Ford GT-யின் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்து போயுள்ளது. இது தொடர்பாக விபத்து நடந்த நேரத்தில், அங்கே இருந்த நபர் ஒருவர், Ford GT கார் சேதமடைந்து நிற்கும் புகைப்படத்தினை எடுத்து, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். 550 Hores Power கொண்ட இந்த கார் edition, மிக குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே உலகம் முழுவதிலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து, கியர் மாற்றும் போது நடந்ததாகவும் கூறப்படுகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த புகைப்படத்தினை கண்டு, ஏங்கி போயுள்ளனர். கோடி ரூபாய் கார் இப்படி சின்னாபின்னமாக நிற்பதைக் கண்டு அதிர்ந்தும் போயுள்ளனர்.

america florida man crashes his 5 crore ford gt car

காரணம் என்ன?

இது பற்றி, போலீசாரிடம் பேசி இருந்த ராபர்ட், கியர் மாற்றியது மட்டும் காரணமில்லை என்றும், பழைய டயர் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, சாலை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்ததும், காருக்குள் புதிதாக பல பகுதிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தெரியாமல், மரத்தில் கார் சென்று மோதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் வேகமாக கார் ஒட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

america florida man crashes his 5 crore ford gt car

எனினும், விபத்து நிகழ்த்தியதன் பெயரில், ராபர்ட் மீது போலீசார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

FORD GT, CAR CRASH

மற்ற செய்திகள்