‘2021 ஜுன் மாதம் வரைக்கும்’ .. ‘கொரோனா’ தொற்று காலக்கட்டத்தில் ஊழியர்களுக்கு அமேசான் கொடுத்த அடுத்த அதிரடி ஆஃபர்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஊழியர்களிடம் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று அமேசான் கூறியுள்ளது. COVID-19 தொற்றுநோய் காரணமாக வரும் ஜூன் வரை அவ்வாறு வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்றும். அலுவலகத்திற்கு திரும்புவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
"வீட்டிலிருந்து திறம்பட செய்யக்கூடிய அளவில் வேலைகளை செய்யும் ஊழியர்கள் 2021 ஜூன் 30 வரை அவ்வாறு பணிபுரிய வரவேற்கப்படுகிறார்கள்" என்று அமேசான் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள அமேசான் ஊழியர்களுக்கு பொருந்தும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையகமான அமேசன் 19,000 க்கும் அதிகமான யு.எஸ். முன்னணி தொழிலாளர்களுடன், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் ஒப்பந்தம் செய்ததாகவும், மூன்று வாரங்களுக்குள் இந்த வளர்ச்சி அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த கொரோனா தொற்றுநோய் காலக்கட்டத்தின்போது அலுவலகத்தை திறந்து வைத்திருப்பதன் மூலம் ஊழியர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும் என்பதால, அலுவலகத்திற்கு வர விரும்புவோர் தனி மனித இடைவெளி, வெப்பநிலை பரிசோதனைகள் மற்றும் முகக்கவசம் மற்றும் கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்டவை மூலம் பாதுகாப்பாக வைத்திருக்க குறிப்பிடத்தக்க நிதி மற்றும் வளங்களை நாங்கள் முதலீடு செய்துள்ளோம்” என்றும் அமேசான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்