'ஒரு லட்சம் பேருக்கு வேலை ரெடி...' அதுவும் எங்க தெரியுமா...? - அமேசானின் 'வாவ்' அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் மக்களிடையே நெருக்கடி நிலை உருவானது. எனவே உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளிலே முடங்கி கிடந்தனர்.
குறு வணிகம் முதல் பெரு வணிகம் வரை அனைத்து தொழில்களும் முடங்கியது.
இந்த லாக்டவுன் காலக்கட்டத்தில் தான் மக்களிடையே ஆன்லைன் வர்த்தகம் வெகுவாக அதிகம் ஆகியது. இந்த நிலையில், மேலும் ஒரு லட்சம் தொழிலாளர்களை பணியில் சேர்க்க உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான அமேசான் நிறுவனம், 8 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களுடன் கடந்த காலாண்டில் 40% வருவாய் உயர்வு மற்றும் 26 ஆண்டு வரலாற்றில் மிகப்பெரிய லாபத்தையும் ஈட்டியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் புதிதாக 100 பெரிய குடோன்களையும், பணிசார் செயல்பாட்டு தளங்களையும் திறக்க உள்ளது. இது பணிக்கு முனைவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்