ஓடுறா..ஓடுறா.. ஏரியில் மிதந்து வந்த வினோத உயிரினம்.. தெறிச்சு ஓடிய மக்கள்.. கடைசியில் ஆய்வாளர்கள் சொன்ன உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் உள்ள ஏரி ஒன்றில் வித்தியாசமான உடலமைப்புடன் கூடிய முதலை வலம் வந்திருக்கிறது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
Also Read | உலகத்தின் குறைவான உயரம் கொண்ட இளைஞர்.. இவருக்கு இவ்ளோ வயசா..? கின்னஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!
முதலைகள்
நீர் மற்றும் நிலத்தில் வசிக்கக்கூடிய முதலைகள் இரைகளை வேட்டையாடுவதில் அபார திறமையுடைய உயிரினம் ஆகும். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள எவெர்க்ளாட்ஸ் நீர் பரப்பில் முதலைகள் கணிசமான அளவு வசித்துவருகின்றன. இவற்றை பார்க்கவே பலரும் இந்த நீர்நிலைக்கு செல்வதுண்டு. அப்படி, சமீபத்தில் இப்பகுதிக்கு சென்ற ஸ்டேசி லியனேட் என்பவர் வித்தியாசமான முதலை ஒன்றை பார்த்திருக்கிறார். அதனை புகைப்படம் எடுத்த ஸ்டேசி தனது பேஸ்புக் பக்கத்திலும் அவற்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
வினோத உயிரினம்
ஸ்டேசி புகைப்படம் எடுத்த முதலையின் மேல்தாடையில் பெரும்பான்மையான பகுதியை காணவில்லை. கீழ் தாடையில் உள்ள பற்கள் தண்ணீருக்கு மேலே அச்சம் தரக்கூடிய வகையில் நீட்டிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்துப் பேசிய ஸ்டேசி," அதை தூரத்தில் தான் பார்த்தேன். அதன் மேல்தாடையை காணவில்லை. உடனடியாக புகைப்படம் எடுக்க நினைத்தேன். அது தூரத்தில் இருந்ததால் சரியாக போட்டோ எடுக்க முடியவில்லை" என்றார்.
என்ன காரணம்?
ஸ்டேசி எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலானதை தொடர்ந்து உண்மையாகவே இப்படி ஒரு வகை முதலை இருக்கிறதா? என்ற கேள்வி பெரும்பாலான மக்களிடத்தில் எழுந்தது. ஆனால் ஆய்வாளர்கள் அது சாதாரண முதலை தான் எனத் தெரிவித்திருக்கின்றனர். 9 அடி நீளமிருந்த அந்த முதலையை மற்ற முதலை தாக்கியதால் அதன் மேல்தாடை துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
"ஆண் முதலைகள் தங்களது இணைகளுடன் சேர்வதற்க்காக சக ஆண் முதலைகளுடன் கடுமையாக சண்டையிடும் வழக்கம் கொண்டவை. அதேபோல, இரையை வேட்டையாடும்போதும் முதலைகளுக்குள் சண்டை ஏற்படும். அப்படியான சண்டையில் தாக்கப்பட்டதால்அந்த முதலையின் தாடை பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஸ்டேசி எடுத்த புகைப்படத்தில் இருப்பது வித்தியாசமான உயிரினம் என நினைக்கப்பட்ட நிலையில், அது சாதாரண முதலைதான் என ஆய்வாளர்கள் விளங்கியதால் அப்பகுதி மக்கள் ஆசுவாசமடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்