'துப்பாக்கி எடுத்து சுடுற மாதிரி சீன்...' 'டிஸ்யூம்' என கேட்ட அடுத்த செகண்ட்... ஒட்டுமொத்த படக்குழுவும் 'நடுங்கி' போய்ட்டாங்க...! - 'ரணகளமான' ஷூட்டிங் ஸ்பாட்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் பிலிம் செட்டில் வைக்கப்பட்டிருந்த போலி துப்பாக்கியால் பெண் ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'துப்பாக்கி எடுத்து சுடுற மாதிரி சீன்...' 'டிஸ்யூம்' என கேட்ட அடுத்த செகண்ட்... ஒட்டுமொத்த படக்குழுவும் 'நடுங்கி' போய்ட்டாங்க...! - 'ரணகளமான' ஷூட்டிங் ஸ்பாட்...!

அமெரிக்காவில் ஜோயல் சோசா இயக்கத்தில் அலெக் பால்ட்வின் (Alec Baldwin) 'ரஸ்ட்' என்கிற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான செட் நியூ மெக்சிகோவில் அமைக்கப்பட்டு படப்பிடிப்பும் விருவிருப்பாக நடந்து வந்துள்ளது.

Alec Baldwin shoots woman with prop gun on rust movie set

இந்நிலையில் நேற்று (21-10-2021) போலி துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுடும் காட்சி படமாக்க பட்ட நிலையில் அங்கு எதிர்பார்க்காத அசம்பாவிதம் ஒன்று நடந்துள்ளது. அலெக் பால்ட்வி போலி துப்பாக்கியால் சுடும் போது அங்கிருந்த புகைப்பட இயக்குனரான ஹலினா ஹட்சின்ஸ் மீது குண்டு பாய்ந்துள்ளது.

Alec Baldwin shoots woman with prop gun on rust movie set

அப்போது தான் அங்கிருபவர்களுக்கு அந்த துப்பாக்கியில் உண்மையான குண்டு இருந்த விஷயம் தெரியவந்துள்ளது. ஹலினா மட்டுமல்லாது இயக்குநர் ஜோயல் சோஸா இருவரும் படுகாயமடைந்தனர்.

Alec Baldwin shoots woman with prop gun on rust movie set

இதில் துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால் 42 வயதான ஹட்சின்ஸ் காயம் காரணமாக மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். தற்போது இயக்குனர் சோஸாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Alec Baldwin shoots woman with prop gun on rust movie set

இதுவரை இந்த சம்பவம் குறித்து யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மேலும், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இது விபத்துதான் என்று படக்குழுவினரும், ஹாலிவுட் வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஹட்சின்ஸ் உக்ரனை சேர்ந்தவர் எனவும், இவர் ஊடகவியலாளர் துறையில் பட்டப்படிப்பு படித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு லாஸ் ஏன்ஜல்ஸின் ஒளிப்பதிவாளர் இதழில் 'ரைசிங் ஸ்டார்' (Rising star) என கூறி கவுரவப்படுத்தியது.

மற்ற செய்திகள்