Alberta : பெற்ற மகளென்று தெரியாமல் மருத்துவம் பார்த்த தாய்.. வீட்டுக்கு வந்த பின்பு வந்து சேர்ந்த துயர செய்தி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

WARNING: Distressing content

Alberta : பெற்ற மகளென்று தெரியாமல் மருத்துவம் பார்த்த தாய்.. வீட்டுக்கு வந்த பின்பு வந்து சேர்ந்த துயர செய்தி!

இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவக் குழுவினரில் ஒருவரே அப்பெண்ணின் தாயார் என்பதும், ஆனால் விபத்துக்குள்ளான பெண் , அதன் பிறகு இறந்துள்ள சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்பர்ட்டாவில் விபத்து ஒன்று நடந்தேறியதை அடுத்து, இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்கென்று மருத்துவ உதவி குழுவினராக இருக்கும்  Jayme Erickson என்பவருக்கு அழைப்பு வந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு ஓடிச் சென்று முதலுதவி செய்யும் இந்த மருத்துவ குழு எந்த அழைப்பு வந்தாலும் தாமதிக்காமல் உடனே சென்று அவர்களுக்கு முதலுதவி மருத்துவம் பார்ப்பதுண்டு.

அப்படி இப்போது வந்த இந்த அழைப்பையும் ஏற்று முதல் ஆளாக Jayme, சக மருத்துவ உதவி குழுவினரோடு புறப்பட்டு சென்று இருக்கின்றனர். ஆனால் விபத்துக்குள்ளான அந்த இளம்பெண், இந்த விபத்தில் சிக்கி அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்து போன நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்று அவருக்கு இந்த மருத்துவ உதவி குழு உறுப்பினர் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக மேலாக சிகிச்சை அளித்து இருக்கின்றனர். அதன் பின்னர் அந்த இளம் பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் சிகிச்சை அளித்த பின்பு வீடு திரும்பி இருக்கிறார் Jayme. சில மணி நேரத்தில் Jayme வீட்டுக்கு போலீசார் அவரை தேடி வந்து ஒரு செய்தியை கூறியிருக்கிறார்கள். அது என்னவென்றால் Jayme-ன் மகள் Montana உயிரிழந்துவிட்டார் என்பதுதான். அதுவும் விபத்தில் இறந்து, முக அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்த பின் Montana உயிரிழந்துவிட்டார் என போலீஸார் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகே Jaymeக்கு விஷயமே தெரியவந்தது.

Alberta paramedic tried to save crash victim but its her daughter

                                                                        Image: CBC

ஆம், சற்று முன் Jayme-ம் அவரது மருத்துவ குழுவும் சிகிச்சை அளித்த அந்த இளம் பெண் வேறு யாருமில்லை. Jayme-ன் மகள் Montana தான். ஆனால் பெற்ற தாய்க்கே அடையாளம் தெரியாத அளவுக்கு விபத்தில் அவருடைய முகம் சிதைந்து போனது, பின்னர் Jayme முதலுதவி செய்தும், ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட Montana காயங்கள் காரணமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்ட Jayme-ன் குடும்பத்தினரும், Jayme-ன் மருத்துவ முதலுதவி குழு நண்பர்களும் அதிர்ந்துள்ளனர்.

அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்ததால், விபத்துக்குள்ளானது பெற்ற மகள் Montana என தெரியாமல் Jayme அவருக்கு 20 நிமிடம் முதலுதவி செய்துள்ள சம்பவம் கலங்க வைத்துள்ளது.

ALBERTA PARAMEDIC RESPONDED TO A CAR CRASH, CANADA, JAYME ERICKSON, MONTANA

மற்ற செய்திகள்