"இந்த ஒத்த Building தான் மொத்த ஊரா??".. 14 மாடி கொண்ட கட்டிடம்.. அதிசய ஊரை பாத்து ஆடிக் கிடக்கும் நெட்டிசன்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, நகரம் (Town) என நாம் குறிப்பிட்டாலே, ஏராளமான வீடுகள், தெருவுக்கு தெரு கடைகள், பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பல விஷயங்கள் நிறைந்து இருக்கும்.
பல மைல் தூரத்தில் மேற்குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் நிரம்பி இருந்தால் தான், அதனை நகரம் என குறிப்பிடுவோம்.
ஆனால், ஒரே ஒரு கட்டிடம் தான் நகரம் என குறிப்பிடப்பட்டு வந்தால், உங்களால் அதனை நம்ப முடிகிறதா?. ஆம், அது உண்மை தான். 14 மாடி கட்டிடம் ஒன்று நகரம் என மக்களால் குறிப்பிடப்பட்டு வருவது தான் பலரையும் தற்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ளது Whittier என்னும் பகுதி. இங்கே ஒரு கட்டிடத்துடன் நகரம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் பெயர் Begich Towers. மேலும் இந்த கட்டிடத்தில் மொத்தம் 14 மாடிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, இந்த ஒரு கட்டிடத்தில் சுமார் 300 பேர் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த கட்டிடத்திற்குள்ளேயே மருத்துவமனை, காவல் நிலையம், தபால் நிலையம், சூப்பர் மார்க்கெட், சர்ச் என மக்கள் அத்தியாவசியமாக செல்லும் அனைத்து இடங்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் அடித்தளத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதை வழியாக அருகில் உள்ள பள்ளிகளுக்கும் இங்குள்ள மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர்.
இங்கிருப்பவர்கள் ஏதாவது பொருட்கள் வாங்கவோ அல்லது வேறு ஏதேனும் விஷயத்திற்காகவோ வெளியே செல்ல வேண்டிய தேவைகளும் பெரிதாக இல்லை. அருகேயுள்ள துறைமுகம் ஒன்றில் பணியாற்றி வருபவர்கள் தான் இந்த கட்டிடத்தில் தங்களின் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள இடங்கள், ரயில்வே துறைக்கு சொந்தமாக இருப்பதனால், இப்படி ஒட்டுமொத்தமாக ஒரே கட்டிடத்தில் அனைவரும் இணைந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பனிமலைகள் சுற்றி இருப்பதால் பெரும்பாலான நாட்களில் பனிகளால் இந்த பகுதி சூழப்பட்டு இருக்கும். 1990 களில் இந்த கட்டிடம் கட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.
இங்கே வசிப்பவர்களில் பெரும்பாலானோர் வெளி உலகம் பற்றி அதிகம் தெரியாமலே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. வெளியே இருந்து ஒருவர் இந்த நகரத்திற்கு செல்ல வேண்டுமென்றால், பனி மலைகளை கடந்து தான் செல்ல வேண்டும். அப்படி செல்வதற்காக மலைகளுக்கு அடியே சுரங்கப்பாதை ஒன்று சுமார் 2.5 மைல் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
பலரும் இந்த நகரம் தொடர்பான செய்தியை பார்த்து ஒரு நிமிடம் அப்படியே மிரண்டு போயுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
Also Read | "அடேங்கப்பா, 9 வயசுல இப்டி ஒரு திறமையா??".. இந்திய சிறுமியின் செயலை கண்டு வியந்து போன ஆப்பிள் CEO!!
மற்ற செய்திகள்