"அடேங்கப்பா, அப்பா, அம்மா, புள்ள". 1 லட்சத்துல 1 குழந்தைக்கு நடக்கும் அதிசயம்!!.. வியப்பை உண்டு பண்ணிய குடும்பம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் தம்பதிக்கும் அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கும் உள்ள ஒற்றுமை தொடர்பான செய்தி, தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ஹன்ட்ஸ்வில்லே என்னும் பகுதியை சேர்ந்தவர் Cassidy. இவரது கணவரின் பெயர் Dylan Scott. கணவன் மற்றும் மனைவியான் இவர்கள் இருவரும் ஒரே தேதியில் (நவம்பர் 18) பிறந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த சூழலில் தான் தற்போது மற்றொரு வியப்பான சம்பவமும் நடைபெற்றுள்ளது. அதாவது, Cassidy மற்றும் Dylan ஆகியோருக்கு பிறந்த குழந்தையும் டிசம்பர் 18 ஆம் தேதியன்று பிறந்துள்ளது என்பது தான்.
அது மட்டுமில்லாமல், புதிதாக பிறந்த இந்த குழந்தை, பெற்றோர் இருவரும் பிறந்த அதே தேதியில் பிறந்ததுடன் மட்டுமில்லாமல், 1,33, 000 பேரில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வில் இணைந்துள்ளதாகவும் அலபாமா மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் காரணமாக, தற்போது தாய், தந்தை மற்றும் குழந்தை என மூன்று பேரும் ஒரே பிறந்தநாள் தேதியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக, டிசம்பர் 27 ஆம் தேதியன்று குழந்தை பிறக்கும் என்ற நிலை இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இது குறித்து பேசும் குழந்தையின் தாய் Cassidy, தங்களின் குழந்தைக்கு தனியாக ஒரு பிறந்தநாள் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் ஆனால் அதே வேளையில் கணவர் ஸ்காட், தங்களது பிறந்த நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்படி ஒரு சூழலில் தங்களது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், Cassidy- க்கு பிரசவ வலி ஏற்பட அவரை மருத்துவமனையில் சேர்த்து அங்கே அவருக்கு பிரசவம் பார்க்கப்ட்டுள்ளது. இந்த நிலையில் தான், தற்போது அவர்கள் பிறந்தநாளில் தங்களின் குழந்தையும் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்