கப்பல்ல திருட வரல.. அவங்க திருடுனதே கப்பலைத்தான் – ஸ்கெட்ச் போட்டு கப்பலைக் கடத்திய தீவிரவாதிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான RWABEE எனும் சரக்குக்கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.57 மணிக்கு ஏமனின் அல் குதைபா ஆளுமைக்குட்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்த போது ஹவுதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக ஏமன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கப்பல்ல திருட வரல.. அவங்க திருடுனதே கப்பலைத்தான் – ஸ்கெட்ச் போட்டு கப்பலைக் கடத்திய தீவிரவாதிகள்..!

ஆரம்பத்தில் கப்பலில் கொள்ளை முயற்சி நடந்ததாகவே தகவல் வெளியாகின.. அதன் பின்னர் தான் தெரியவந்தது.. தீவிரவாதிகள் கப்பலில் திருடவில்லை. அவர்கள் திருடியதே கப்பலைத்தான் என்று.

Al Houthi Terrorist group Hijacked UAE cargo ship

கப்பலில் அப்படி என்ன இருக்கு?

சோகோட்ரா தீவில் சவூதி அரேபியா அமைத்திருந்த தற்காலிக மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உபகரணங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், அடுப்புகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிய பொருட்களுடன் சவூதியின் ஜஸான் துறை முகத்திற்கு சென்றுகொண்டிருந்த வேளையில் கப்பலை களவாடியிருக்கிறது ஹவுதி தீவிரவாத அமைப்பு.

குட்டி உடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த யானை... உள்ளே அனுமதிக்க நீண்ட நேர போராட்டம்!- வைரல் காட்சிகள்

 

Al Houthi Terrorist group Hijacked UAE cargo ship

யார் இந்த ஹவுதி தீவிரவாதிகள்?

பழங்கால ஏமனின் வட பகுதியில் ஆட்சியில் இருந்த ஷியா பிரிவைச் சேர்ந்த ஸெய்தி இனக்குழுவின் பாதுகாப்புப்படையாக முதலில் அறியப்பட்ட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி உடனான எல்லை பிரச்னையின்போது உலகளவில் கவனம் பெற்றனர்.இவர்களுக்கு ஈரான் அரசு உதவி செய்வதாக சவூதி, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Al Houthi Terrorist group Hijacked UAE cargo ship

சவூதியின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து சமீபகாலமாக டிரோன் தாக்குதலை நடத்திவரும் ஹவுதி தீவிரவாத அமைப்பை அமீரக அரசு கண்டித்து வந்தது. இந்நிலையில் அமீரகத்தின் கப்பலையே ஹௌதி தீவிரவாதிகள் கடத்தியிருப்பது மத்திய கிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TERRORIST, HIJACKED, UAE, CARGO SHIP, IRAN

மற்ற செய்திகள்