இங்கிலாந்து ராணியை விட அதிக சொத்து.. உலகை திரும்பி பார்க்கவைத்த இந்திய பெண்.. யார் இந்த அக்சதா மூர்த்தி?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை முந்தி முதலிடத்தை பிடித்திருக்கிறார் இங்கிலாந்தில் வசித்துவரும் அக்சதா மூர்த்தி என்ற இந்திய பெண்.

இங்கிலாந்து ராணியை விட அதிக சொத்து.. உலகை திரும்பி பார்க்கவைத்த இந்திய பெண்.. யார் இந்த அக்சதா மூர்த்தி?

அக்சதா மூர்த்தி

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் ஒன்றான இன்போசிஸ்-ஐ துவங்கியவர் நாராயண மூர்த்தி. அமெரிக்காவின் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையும் இன்போசிஸிற்கு உண்டு. நாராயண மூர்த்தி - சுதா தம்பதியின் மகளான அக்சதா புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். அப்போது உடன் பயின்ற ரிஷி சுனக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அக்சதா. ரிஷி தற்போது இங்கிலாந்து நாட்டின் நிதியமைச்சராக பணிபுரிந்துவருவது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு

100 பில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்பு கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தின் 0.9 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார் அக்சதா. இதனால் அவரது சொத்து மதிப்பு கணிசமான அளவு உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 7 ஆயிரம் கோடி சொத்து அக்சதாவிற்கு இருக்கிறது. இது இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத்தைதின் மொத்த சொத்துக்களை விட அதிகமாகும்.

இங்கிலாந்தின் சவுதாம்படன் பகுதியில் வசித்து வரும் அக்சதா - ரிஷி தம்பதி 2013 ஆம் ஆண்டு கெடமரன் வென்சர்ஸ் என்னும் நிறுவனத்தை துவங்கினர். இந்த நிறுவனத்தின் இயக்குனராக அக்சதா இருக்கிறார்.

ரிஷி  சுனக்

இங்கிலாந்து நாட்டின் தற்போதைய நிதியமைச்சராக இருக்கும் ரிஷி தனது மனைவியின் வெளிநாட்டு சொத்துகளுக்கு வரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விரைவில் வரி செலுத்த இருப்பதாக அக்சதா தற்போது அறிவித்து உள்ளார்.

இங்கிலாந்தை பொறுத்தவரை வெளிநாடுகளில் பிறந்து அங்கே வசித்து வருபவர்கள் தங்களுடைய வெளிநாட்டு வருமானங்களுக்கு இங்கிலாந்து அரசுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. இந்தியாவில் பிறந்தவரான அக்சதா அதன் காரணமாகவே தன்னுடைய இன்போசிஸ் நிறுவன வருமானத்துக்கு வரி செலுத்தவில்லை என ரிஷி முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

QUEENELIZABETHII AKSHATAMURTHY, INFOSYS, அக்சதாமூர்த்தி, இங்கிலாந்துராணி, இரண்டாம்எலிசபெத்

மற்ற செய்திகள்