'விருப்பமில்லாமல் 6,770 பேர்.. தானாக 5,520 பேர்'.. '12 ஆயிரம் ஊழியர்கள் வேலைநீக்கம்'.. ஆனாலும் அடுத்த 'குண்டை' தூக்கிப் போடும் 'ஏர்லைன்ஸ்' நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் மிக முக்கியமான ஏர்லைன்ஸ் நிறுவனமான போயிங் நிறுவனம், 6,770 தொழிலாளர்களை கட்டாயமாக வேலையை விட்டு நீங்கச் சொல்லி அறிவுறுத்தியது உட்பட சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்குவதாக அறிவித்திருந்தது.

'விருப்பமில்லாமல் 6,770 பேர்.. தானாக 5,520 பேர்'.. '12 ஆயிரம் ஊழியர்கள் வேலைநீக்கம்'.. ஆனாலும் அடுத்த 'குண்டை' தூக்கிப் போடும் 'ஏர்லைன்ஸ்' நிறுவனம்!

முந்தைய வாரத்தில் தானாகவே வேலையை விட்டு நீங்குவதாக ஒப்புதல் அளித்த 5,520 ஊழியர்களும் இதில் அடங்குவர். இதுபற்றி அந்நிறுவனத்தின் தரப்பில் இருந்து தரப்பட்ட விளக்கத்தின்படி, கொரோனா வைரஸ் விமான துறைகளில் பேரழிவுக்குட்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், வாடிக்கையாளர்களுக்கான சேவையே ரத்து செய்யப்படுகிற சூழலுக்கு விமான நிறுவனம் தள்ளப்படுவதால், வணிக ரீதியான நடவடிக்கையாக போயிங் அலுவகலத்திலும் ஊழியர்களைக் குறைவான எண்ணிக்கையுடன் மட்டுமே வேறு வழியின்றி இருத்தி வைக்க வேண்டியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைப்பட்ட நாட்களில் 145.76 டாலராக உயர்ந்திருந்த போயிங் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பிறகு பூஜ்ஜியத்தை சந்தித்ததாகவும், 1962க்குப் பிறகு முதல் முறையாக இம்முறைதான் 737 மேக்ஸ் விமானத்துக்கான 108 ஆர்டர்களை கஸ்டமர்கள் ரத்து செய்துள்ளதாகவும் இதனால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ள போயிங் நிறுவனம், வாஷிங்டன்னை பொருத்தவரை 9,800 ஊழியர்களை வேலைநீக்கம் செய்வதாகவும், இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களிலும் சிறுக சிறுக பணிநீக்கம் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  தவிர, வாஷிங்டன்னில் மிக விரைவில், உற்பத்தியைத் தொடங்குவதை நோக்கி முன்னேற முயற்சிப்போம் என்றும், 2021-ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி விகிதத்தை அதிகரிக்க முயற்சிப்போம் என்றும் போயிங் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்