'இந்த நோயால அவங்க பெரிய அழிவ சந்திச்சிருக்காங்க...' 'இப்போ மறுபடியுமா...? - 126 மில்லியன் மக்களுக்கு அபாயம் என ஆய்வு முடிவு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்பிரிக்காவில் பரவும் கொசுக்களால் ஏற்படும் மலேரியா நோயால் சுமார் 126 மில்லியன் ஆப்பிரிக்கர்கள் அபாயத்தில் உள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

'இந்த நோயால அவங்க பெரிய அழிவ சந்திச்சிருக்காங்க...' 'இப்போ மறுபடியுமா...? - 126 மில்லியன் மக்களுக்கு அபாயம் என ஆய்வு முடிவு...!

கடந்த திங்கட்கிழமை வெளியான ஆய்வுகள் முடிவில், ஆசியாவில் இருந்து பரவிய ஒரு கொசு இனமானது ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் பரவி, பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க நகரவாசிகள் மலேரியா தாக்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் ஆப்பிரிக்கா முழுவதும் மலேரியாவால் சுமார் 4,00,000 மக்கள் உயிரிழத்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றில் அதிகமாக பாதிக்கப்பட்டது குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்காவில் அனோபிலிஸ் காம்பியா எனும் கொசு இனங்கள் மூலம் தான்  மலேரியா பரவ முக்கிய காரணங்களாக உள்ளன. இவை நகரங்களில் காணப்படும் மாசுபட்ட குட்டைகளில் இருக்க விரும்பாமல், நகர்ப்புற நன்னீர் தொட்டிகளில் தங்கள் லார்வாக்களை இட்டு தங்கள் எண்ணிக்கையை அபரிவிதமான அதிகரிக்கிறது.

இதுகுறித்து தேசிய அறிவியல் அகாடமி (பி.என்.ஏ.எஸ்) பற்றிய செயல்முறைகளில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், ஆசியாவில் தோன்றிய அனோபிலிஸ் ஸ்டீபன்சி, புதிய மற்றொரு இனத்தின் பரவலை குறிக்கிறது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பூச்சியியல் வல்லுநர் மரியான் சிங்கா கூறுகிறார். மேலும் இந்த இனம் செங்கல் மற்றும் சிமெண்டிலிருந்து தயாரிக்கப்படும் நீர் தொட்டிகளில் உள்ள விரிசல்களில் நழுவ கற்றுக்கொண்டது. இதனால் இந்த கொசு இனங்கள் மற்றும் லார்வாக்கள் நீர் தொட்டிகளில் இருப்பதை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.

அனோபிலிஸ் ஸ்டீபன்சி 2012-ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் ஹார்ன், பகுதியில் உள்ள ஜிபூட்டி நகரத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைய காலத்துடன் ஒப்பிடும்போது  சுமார் 126 மில்லியன் ஆப்பிரிக்கர்கள், முக்கியமாக பூமத்திய ரேகை பகுதிகளைச் சுற்றி இருப்பவர்கள் மலேரியா அபாயத்தில் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஆப்பிரிக்க கொசுக்களை போலன்றி, அனோபிலஸ் ஸ்டீபன்சி இரவில் குளிர்ச்சியாக இருக்கும்போது மனிதர்களைக் கடிக்க விரும்புகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்