என்னமோ 'காய்கறி' வாங்கிட்டு போறமாதிரில போறாங்க...! - 'கந்தஹார்' மாகாணத்தில் இருந்து வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில் அங்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் (07-09-2021) 33 நபர்கள் கொண்ட அமைச்சரவையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட முக்கிய அமைச்சர்கள் பட்டியலில் அமெரிக்கா தேடிவரும் தீவிரவாதிகளும், இதற்கு முன் கைது செய்யப்பட்டு சிறை சென்ற நபர்களும் அடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது கந்தஹார் மாகாணத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்கும் கடைகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இங்கு விற்கப்படும் துப்பாக்கிகள், ஆயுதங்கள் பெரும்பாலும் சீனா மற்றும் ரஷ்யாவில் தயாரானவை என வியாபாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக ஆயுதங்களை தாலிபான் அமைப்பை சேர்ந்தவர்களும், அதிகமான பொதுமக்களும் வாங்குவதாக தெரிவிக்கின்றனர்.
மற்ற செய்திகள்