திடீரென உள்ளே புகுந்த அமெரிக்க படைகள்!.. காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு!.. செய்வது அறியாது கதறும் ஆப்கானிஸ்தான்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்கு நடக்கும் காட்சிகளைப் பார்த்து உலகமே சோகக் கடலில் மூழ்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வீழ்ந்ததால், பல மக்களும் அகதிகளாக வேறு நாடுகளை நோக்கி புலம்பெயர ஆரம்பித்துள்ளனர். இதனால் விமானங்களை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் காபூல் ஏர்போர்ட்டில் குவிந்ததால், அங்கேயுள்ள அமெரிக்க படைகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டன. இதனால் பயணிகள் மிரண்டு போயினர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் குடிமக்கள் மற்றும் கூட்டாளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்வதற்காக காபூல் விமான நிலையத்தில் 6,000 பாதுகாப்பு படையினரை அமெரிக்கா நிலை நிறுத்தியுள்ளது.
ஒரு கட்டத்திற்கு மேல் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்