'அது தீவிரவாதிகளோட வண்டி தான்'!.. கண் இமைக்கும் நேரத்தில்... சாம்பலாக்கிய அமெரிக்க ராணுவம்!.. பக்கத்தில போய் பார்த்தா... குலை நடுங்கவைக்கும் ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்காபூலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அமெரிக்க ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் கோரசான் மாகாணத்தைச் சேர்ந்த அஹ்மதி மற்றும் நெஜ்ராபி குடும்பத்தினர் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு காபூல் விமானநிலையம் புறப்பட்டனர். அப்போது, ஐஎஸ்ஐஎஸ்-கே (ISIS-K) பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியது.
ஆனால், அமெரிக்க ராணுவம் தவறுதலாக ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர் இருப்பதாக நினைத்து, அஹ்மதி குடும்பத்தினர் புறப்பட்ட காரின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில், பல குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
36 வயது நிரம்பிய செமரே அஹ்மதி (Zemaray Ahmadi), அவரது மூன்று மகன்கள் ஜாமீர் (20), பைசல் (16) மற்றும் ஃபர்சாத் (12) ஆகியோருடன் கொல்லப்பட்டார்.
அத்துடன், அவரது 6 மருமகன் மற்றும் மருமகள்களும் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதில் இரண்டு வயதில் ஒரு ஆண் மற்றும் பெண், ஐந்து மற்றும் ஏழு வயது பெண்கள், ஆறு வயது ஆண் மற்றும் 28 வயது ஆண் ஆகியோர் உள்ளடங்குவர்.
அஹ்மதி காபூலில் உள்ள ஒரு வெளிநாட்டு அமைப்பில் தொழில்நுட்ப பொறியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்