இவருக்கா இந்த நிலைமை..! ஒரு வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்த மனுசன்.. வாழ்க்கை இப்படி தலைகீழா மாறிடுச்சே..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் அமெரிக்காவில் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்க ஆதரவுடன் கூடிய ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக வெளியேறியது. இதனை அடுத்து தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஸ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். அதேபோல தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் கைப்பற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அந்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த காலித் பயெண்டா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.
அங்கு குடும்பத்தை கவனிக்க கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் உள்ள வால்ஷ் ஸ்கூல் ஆஃப் ஃபாரின் சர்வீஸில் துணை பேராசிரியராகவும் பகுதி நேரத்தில் பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து கூறிய காலித் பயெண்டா, ‘ஒரு நாளைக்கு 6 மணிநேரம் கால் டாக்ஸி ஓட்டுகிறேன். அதில் 150 டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கிறேன். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு அமெரிக்காதான் காரணம். ஏனென்றால் அமெரிக்க ராணுவம் திரும்பப் பெறபட்டதால்தான் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். 20 ஆண்டுகள் அமெரிக்கா அளித்த நம்பிக்கையில் ஆட்சி செய்து வந்தோம். அது அட்டைகளின் மீது கட்டப்பட்ட வீடு போல ஒரே நாளில் சரிந்து விழுந்துவிட்டது. என வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் நிதி அமைச்சராக இருந்தபோது 6 பில்லியன் டாலர் பட்ஜெட்டை சமர்ப்பித்தவர், இப்போது 150 டாலருக்காக கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்