Veetla Vishesham Mob Others Page USA

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. தரைமட்டமான வீடுகள்.. சுமார் 255 பேர் உயிரிழப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 255 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. தரைமட்டமான வீடுகள்.. சுமார் 255 பேர் உயிரிழப்பு..!

Also Read | 126 பயணிகளுடன் விமானம் தரையிங்கும்போது கேட்ட பயங்கர சத்தம்..கொஞ்ச நேரத்துல பரவிய தீ.. பரபரப்பான ஏர்போர்ட்..!

நிலநடுக்கம்

இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் தரைமட்டமாகியிருக்கின்றன. இதனால் அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக குறைந்தபட்சம் 255 பேர் மரணமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், காயமடைந்த ஏராளமான மக்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதிர்ந்த வீடுகள்

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிமீ (27 மைல்) தொலைவில் 51 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பல கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. மேலும், வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அரசின் செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி தனது ட்விட்டர் பக்கத்தில்,"துரதிஷ்டவசமாக கடந்த இரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பல வீடுகளையும் அழித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Afghanistan earthquake at least 255 people dead

உதவி

நிலநடுக்கத்தினால் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள பக்திகா மாகாணத்தில் இருந்து காயமடைந்த மக்களை ஹெலிகாப்டர் வழியாக அந்நாட்டு அரசு மீட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், உதவி அமைப்புகள் உடனடியாக குழுக்களை அனுப்பவேண்டும் என செய்தித் தொடர்பாளர் கரிமி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Also Read | டூவீலரை டெம்போவாக பயன்படுத்தும் இளைஞர்.. வைரலான வீடியோ.. போலீஸ் போட்ட கமெண்ட் தான் வெயிட்டே..!

AFGHANISTAN, EARTHQUAKE, AFGHANISTAN EARTHQUAKE, ஆப்கானிஸ்தான், நிலநடுக்கம்

மற்ற செய்திகள்