'தாலிபான்கள் முன்ன மாதிரி இல்ல!.. திருந்திட்டாங்களாம்'!.. வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானில் மாணவர்களுக்கு வகுப்பறையின் நடுவில் திரை அமைத்து வகுப்புகள் நடப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

'தாலிபான்கள் முன்ன மாதிரி இல்ல!.. திருந்திட்டாங்களாம்'!.. வைரலாகும் புகைப்படங்கள்!

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போருக்குப் பின் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்புவதைத் தொடர்ந்து, அங்கு பல்கலைக்கழகங்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தாலிபான்களின் கல்வி ஆணையம், கல்வி நிலையங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில், "மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்த வேண்டும் அல்லது நல்ல குணமுள்ள முதிய வயது ஆண் ஆசிரியர்களைக் கொண்டே வகுப்புகள் எடுக்க வேண்டும். ஆண்-பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளை அமைக்க வேண்டும்.

வகுப்புகள் முடிவடையும்போது மாணவர்கள் வெளியேறிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே மாணவிகளை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். மாணவிகள் நிகாப், புர்கா உடைகள் கட்டாயம் அணிய வேண்டும். ஆண்-பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்" போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தான், ஆண்-பெண் மாணவர்களுக்கு நடுவில் திரை அமைத்து வகுப்புகள் நடப்பதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

 

மற்ற செய்திகள்