கவலைப்படாத மகனே...! அம்மா 'அங்க' இருந்து தப்பிச்சிட்டேன்டா...! 'ஆப்கானில் இருந்து கிளம்பிய அம்மா...' - 'நடுவானில்' நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானில் இருந்து அமெரிக்க விமானத்தில் அகதியாக புறப்பட்ட பெண்ணுக்கு நடுவானில் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு வருடங்களாக கொரோனா செய்திகள் ஆக்கிரமித்து இருந்த நிலையில், ஆப்கானை தாலிபான் கைப்பற்றிய சம்பவம் தற்போது உலகையே உலுக்கியுள்ளது.
ஆப்கானை கைப்பற்றிய தாலிபான் தீவிரவாத அமைப்பு, தாங்கள் முன்பு போல் இல்லை, தற்போது கொஞ்சம் முற்போக்காக இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும், அவர்கள் நடந்து கொள்வது வேறாகவே உள்ளது. இதனால் மக்கள் அங்கிருந்து தப்பித்து உயிர்பிழைக்கவே முயன்று வருக்கின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் ஆப்கானை சேர்ந்த மக்கள் உள்ளிட்டவர்களை காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க விமானப்படை விமானம் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.
ஆப்கான் மக்கள் உயிர் பயத்தில் வேறு நாட்டுக்கு செல்லும் நேரத்தில், 28 ஆயிரம் அடிக்கு மேலே பறந்துகொண்டிருந்த விமான படை விமானத்தில் நடுவானில் உலகிற்கு இன்னொரு உயிரும் வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. விமானத்தில் செல்லும் போது, காற்றழுத்தம் குறைவாக இருந்ததால், காற்றழுத்தத்தை சீராக்க, விமானி விமானத்தை தாழ்வாக இயக்கினார்.
அதோடு, அமெரிக்க விமானம் ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டு செவிலியர்கள் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்