'கொஞ்சம் கூட பயம் இல்ல!'.. 'நான் இப்படி தான் தலை நிமிர்ந்து வேலைக்கு போவேன்'!.. ஆப்கானில் மாஸாக ரீ என்ட்ரி கொடுத்த 'பெண் தொகுப்பாளர்'!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கான் ஊடகத்துறையில் மீண்டும் பெண் தொகுப்பாளர் ஒருவர் தோன்றியுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வரும் Tolo தொலைக்காட்சி நிறுவனம் அதிரடியான செயல் ஒன்றை செய்துள்ளது.
அதாவது பெண் தொகுப்பாளர் ஒருவருடன் காலை நிகழ்ச்சியை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்ப தொடங்கியுள்ளது. அதே வேலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தாலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
அத்துடன் தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய உடனே அவர்கள் பெண்களுக்கான சில கட்டுப்பாடுகளை அந்நாட்டில் கொண்டு வந்துள்ளார்கள். அதில் ஒன்றாக ஊடகத் துறையில் பணிபுரிந்து வந்த பல பெண்களை தாலிபான்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள்.
மேலும், வெளிநாடுகளில் ஊடகத்தில் பணி புரியும் ஆப்கன் பெண்கள் கட்டாயமாக முகத்தை மூடிய படி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான், ஆப்கானில் பிரபல தொலைக்காட்சியில் பெண் ஒருவர் தோன்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்