தாலிபான்களிடம் இருந்து தப்பித்து... பாதுகாப்பாக இந்தியா வந்த மகிழ்ச்சி!.. மூச்சுமுட்ட பச்சிளம் குழந்தைக்கு முத்தம் கொடுத்த சிறுமி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்தடைந்துள்ள மகிழ்ச்சியை சிறுமி ஒருவர் வெளிப்படுத்திய விதம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

தாலிபான்களிடம் இருந்து தப்பித்து... பாதுகாப்பாக இந்தியா வந்த மகிழ்ச்சி!.. மூச்சுமுட்ட பச்சிளம் குழந்தைக்கு முத்தம் கொடுத்த சிறுமி!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைபற்றியதும், அங்கு பெரும் பதற்ற சூழ்நிலை உருவானது. யாரும் எதிர்பாராத வேகத்தில் இப்படி நிகழ்ந்ததால் அந்நாட்டிலிருந்து வெளிநாட்டினர் மற்றும் முந்தைய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் சிலர் சிக்கியிருந்தனர். அவர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டு கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் சென்றது. அதில் இந்தியர்கள் உட்பட இந்தியாவிற்கு வரவிரும்பும் ஆப்கானிஸ்தானியர்களையும் இந்தியா கொண்டு வந்தது. அதில் மொத்தம் 168 பேர் இந்தியா வந்தடைந்துள்ளனர்.

அவ்வாறு திரும்பியவர்களின் இரண்டு கை குழந்தைகள் உட்பட சில மழலைகளும் இருந்தனர். இந்நிலையில், இந்தியாவிற்கு வந்த அந்த குழுவிலிருந்த குழந்தை ஒன்று சந்தோஷத்தில் தன் தங்கையான பச்சிளம் குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வைராலாக பரவி வருகிறது. இரண்டு குழந்தைகளும் பார்ப்பதற்கு பெண் குழந்தைகள் போல இருக்கின்றனர்.

பெண் குழந்தைகளின் எதிர்காலம் ஆப்கானிஸ்தானில் இனி கேள்விகுறிதான் என பேசப்பட்டு வரும் நிலையில், தாங்கள் அங்கிருந்து தப்பி பாதுகாப்பான இந்திய மண்ணிற்கு வந்ததை நினைத்து அந்த சிறு குழந்தைகள் அன்பை பரிமாறிக்கொள்ளும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதுவரை ஆப்கானிஸ்தானிலிருந்து 392 பேரை 3 விமானங்களில் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் இந்தியர்கள், ஆப்கானிஸ்தான் மக்கள், அந்நாட்டில் வாழ்ந்து வந்த சிக்கீயர்கள், இந்துக்கள், ஆகியோரும் அடங்குவர். மேலும், 135 இந்தியர்கள் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையால் மீட்கப்பட்டு தோஹாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் தோஹாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களில் அந்நாட்டைச் சேர்ந்த 2 எம்.பி.க்களும் உள்ளடங்குவர்.

 

மற்ற செய்திகள்