நான் இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்! 'இனி அவளுக்கு பிடிச்ச பாட்டுக்கு டான்ஸ் ஆடுவா..' கண்ணீருடன் தாய் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா: மரபணு ரீதியான நோயால் பாதிக்கப்பட்டிருந்த யூடியூபர் அடாலியா ரோஸ் வில்லியம்ஸ் தனது 15-ம் வயதில் காலமானார்.

நான் இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்! 'இனி அவளுக்கு பிடிச்ச பாட்டுக்கு டான்ஸ் ஆடுவா..' கண்ணீருடன் தாய் உருக்கம்!

நான் இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்

அவர் மூன்று வயதாக இருக்கும்போதே 'ஹட்சின்சன்-கில்ஃபோர்ட் புரோஜீரியா (Hutchinson-Gilford progeria syndrome) என்ற முதுமை தோற்றமளிக்கும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 15 வயதான அவர் தனது முகநூல் பதிவில் 'நான் இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்' என பகிர்ந்துள்ளார். அவரது இந்த பேஸ்புக் பதிவை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் மேற்பட்ட லைக் செய்துள்ளனர். உலகெங்கிலும் இருந்தும் ஏராளமான இரங்கல் கமெண்டில் குவிகிறது.

Adalia Rose Williams died at age of 15 genetic disease

இனிமேல் அவள் விரும்பிய பாடல்களுக்கு அவளால் டான்ஸ் ஆட முடியும்:

அவருடைய குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில் ''அமைதியாகவே வந்தாள், அமைதியாகவே போய்விட்டாள். ஆயினும், பல கோடி மக்களின் மனதில் நின்று விட்டாள். அவளுக்கு இனி எந்த வலிகளும் கிடையாது. இனி அவள் விரும்பிய பாடல்களுக்கு அவளால் டான்ஸ் ஆட முடியும்'' என கூறியுள்ளனர்.

Adalia Rose Williams died at age of 15 genetic disease

ரோஸ் வில்லியம்ஸ் மூன்று வயதாக இருக்கும்போது, முதுமையை வெளிப்படுத்தும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 13 ஆண்டுகள் மட்டுமே அவரது ஆயுட்காலம் என மருத்துவர்கள் கூறி விட்டனர் என 2018-ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் அவருடைய அம்மா கூறியிருந்தார்.

உடலில் ஏற்பட்ட மாற்றம்:

"அடாலியா பிறந்தபோது, பிறந்து ஒருமாதம் ஆன குழந்தையை போன்று காணப்பட்டார். மருத்துவர்கள். அவளது வளர்ச்சியில் அதிருப்தி அடைந்தனர். இது முதலில் தோன்றிய அறிகுறிகளில் ஒன்றாகும், அதன் பிறகு அவளது வயிற்றில் உள்ள தோல் மிகவும் இறுக்கமாக இருந்தது, வித்தியாசமான தோற்றமாகவும் இருந்தது,” என்று அவரது அம்மா தெரிவித்துள்ளார்.

Adalia Rose Williams died at age of 15 genetic disease

ஃபேஷன் மற்றும் மேக்-அப் பயிற்சிகள்:

டெக்ஸாசில் பிறந்த அடாலியா ரோஸ் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் யூடியூப்பில் பல வீடியோக்களை பதிவேற்றி வந்தார். அவர் தனது உடல்நலன் தொடங்கி ஃபேஷன் மற்றும் மேக்-அப் பயிற்சிகள் வரை அனைத்தையும் பதிவிட்டு வந்தார். இந்த வீடியோக்களிற்கு உலகம் முழுவதும் பார்வையாளர்கள் அதிகரித்தனர்.

Adalia Rose Williams died at age of 15 genetic disease

யூடியூப்பில் மட்டும்  அவருக்கு 2.91 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களும், இன்ஸ்டாகிராமில் 379,000 க்கும் அதிகமான பாலோவர்ஸ்களும் இருக்கின்றனர். இவரது மறைவு அவரை பின்தொடர்பவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADALIA ROSE WILLIAMS, DIED, GENETIC DISEASE, அடாலியா ரோஸ் வில்லியம்ஸ், 15 வயது, YOUTUBER

மற்ற செய்திகள்