‘நொடிப்பொழுதில் கவிழ்ந்த பேருந்து’.. ‘400 அடி’ பள்ளத்தாக்கில் விழுந்து ‘கோர விபத்து’..
முகப்பு > செய்திகள் > உலகம்நேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தின் அர்ஹாகச்ஸ் மாவட்டம் சந்திஹர்கா பகுதியில் இருந்து பட்வால் நகர் நோக்கி ஒரு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. 30க்கும் அதிகமானோர் பயணித்த அந்த பேருந்து நர்பனி என்ற இடத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியைக் கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 400 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில பயணிகள் மலைப்பாங்கான பகுதிகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ACCIDENT, NEPAL, BUS