'முகக்கவச தட்டுப்பாட்டுக்கு தீர்வு...' 'முப்பரிமாண' முறையில் உருவாக்கப்பட்ட 'என் 95 மாஸ்க்...' 'கிருமி நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் முகக்கவசத்திற்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், முப்பரிமாண முறையில் என் 95 முகக்கவசத்தை உருவாக்கி அபுதாபி சாதனை படைத்துள்ளது.

'முகக்கவச தட்டுப்பாட்டுக்கு தீர்வு...' 'முப்பரிமாண' முறையில் உருவாக்கப்பட்ட 'என் 95 மாஸ்க்...' 'கிருமி நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்...'

கிருமி நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முக கவசங்கள் அபுதாபியில் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வருவதையடுத்து அங்கு பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் வெளியே செல்லும்போது முக கவசம், கையுறைகளை அணிந்தபடி செல்வதை பார்க்க முடிகிறது.

இதனால் அமீரகத்தில் முக கவசத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் இருந்து இறக்குமதி குறைந்ததால் தரமான முக கவசங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே இதனை கவனத்தில் கொண்டு `என் 95' என்ற முக கவசத்தை போன்றே தரமான முக கவசத்தை முப்பரிமாண பிரதி எடுக்கும் முறையில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி முபதாலா முதலீட்டு நிறுவனம் மற்றும் அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழகம் இணைந்து வெறும் 48 மணி நேரத்தில் இந்த வகை முக கவசங்களை வெற்றிகரமாக தயாரித்துள்ளது.

இதனை எளிதில் கிருமி நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். இதில் உள்ள வடிகட்டி போன்ற அமைப்பு எளிதாக மாற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலின் பேரில் இந்த வகை முக கவசங்களை விரைவில் அமீரகத்தில் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. உலக அளவில் முகக் கவசத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை இந்த முப்பரிமாண முகக் கவசம் போக்கும் என கருதப்படுகிறது.