'எங்க' தடுப்பூசி 92% வேலை செய்யுது...! ஆனா கண்டிப்பா '3 டோஸ்' போட்டாகணும்...! - ரெண்டாவது கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கியூபாவில் பயன்படுத்தப்படும் அப்டாலா (Abdala) தடுப்பூசி 92 சதவீதம் திறனுடையது என அந்நாடு அறிவித்துள்ளது.

'எங்க' தடுப்பூசி 92% வேலை செய்யுது...! ஆனா கண்டிப்பா '3 டோஸ்' போட்டாகணும்...! - ரெண்டாவது கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நாடு...!

கொரோனா வைரஸிற்கு எதிராக உலக நாடுகள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்துவரும் நிலையில் கியூபா சோபெரானா 2 (Soberana 02) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை விஞ்ஞானிகள் 13 மாதங்களில் கண்டுபிடித்து சாதித்திருப்பதாக கியூபாவின் அதிபர் மிகேல் தியாஸ் கானெல் (Miguel Díaz-Cane) பாராட்டு தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது அப்டாலா (Abdala) என்னும் புதுவகை தடுப்பூசியையும் கியூபா உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளைப் போல அல்லாமல் மூன்று முறை செலுத்திக் கொள்ளும் வகையில் அப்டாலா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது 92 சதவீதம் திறன் கொண்டதாக இருக்கிறது எனவும் கியூபா அறிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்ட இடைக்கால அறிக்கையில், 'கொரோனா வைரஸை எதிர்ப்பதில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக இருப்பதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் தொற்று ஏற்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு குறைவு' என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை முடிவு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதனை ஆராய்ந்த வல்லுநர் குழு, கோவாக்சின் தடுப்பூசி 77.8 சதவீதம் திறன் கொண்டது என அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்