'ஓவர் நைட்டில்' உலகப் புகழ்பெற்ற சுட்டிக் குழந்தை 'இசபெல்லா'... 'ஆங்கிரி பேபி'யின் முறைப்புக்கு காரணம் என்ன?... 'வைரல்' புகைப்படத்தின் 'நெகிழ்ச்சிப்' பின்னணி...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிறந்தவுடன் சமூக வலைதளங்களில் பிரபலமான பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் இசபெல்லா என பெயர் சூட்டியுள்ளனர். தைரியமான மனதுடன் பிறந்த தன் குழந்தை அவள் பிறக்கும் நாளை அவளே தேர்ந்தெடுத்திருப்பதாக அவளது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

'ஓவர் நைட்டில்' உலகப் புகழ்பெற்ற சுட்டிக் குழந்தை 'இசபெல்லா'... 'ஆங்கிரி பேபி'யின் முறைப்புக்கு காரணம் என்ன?... 'வைரல்' புகைப்படத்தின் 'நெகிழ்ச்சிப்' பின்னணி...

மருத்துவமனையில் பிறந்து சில நொடிகளே ஆன குழந்தை மருத்துவர்களை முறைப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. மீம் கிரியேட்டர்களும் இந்தப் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஏராளமான மீம்ஸ்களைப் பகிர்ந்துவந்தனர். இந்த நிலையில், குழந்தையின் புகைப்படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேசிலின் பிரபல நகரான ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் டையானே தி ஜீசஸ் பார்போஸா என்பவருக்கு, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பிறந்த குழந்தைதான் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்த குழந்தை இசபெல்லா பெரேரா தி ஜீசஸ். குழந்தையை ரோட்ரிகோ என்பவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

குழந்தை பிறக்கும் போது அதன் அழகான தருணங்களை படம் பிடிக்க குழந்தையின் அம்மா இந்த புகைப்பட நிபுணரை ஏற்பாடு செய்திருந்தார். குழந்தை பிறந்த தினத்தன்று குழந்தையின் இலகுவான பாவனைகளைப் புகைப்படம் எடுப்பதற்காக அவர் காத்துக்கொண்டிருந்தார். பொதுவாக குழந்தைகள் பிறந்தவுடன் வீரிட்டு அழுது விடும். ஆனால் இசபெல்லா சுற்றி நின்ற அனைவரையும் கண்களை திறந்து கொண்டு ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவள் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். தொப்புள் கொடியை வெட்டிய பின்னரே அழ ஆரம்பித்தாள். குழந்தையின் அனைத்து பாவனைகளையும் ரோட்ரிகோ புகைப்படம் எடுத்தார். அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, "குழந்தையின் முதல் அழுகை விலைமதிப்பற்றது" என பதிவிட்டிருந்தார்.

இசபெல்லாவின் பார்வை கோபமான முறைப்பு அல்ல, மாறாக ஆச்சரியம் கலந்த வியப்பானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாயின் கருவறைக்குள் இருந்து வெளி வந்தவுடன் புதிய உலகம் அவளை வியப்படைய செய்திருக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டனர்.

இசபெல்லாவின் அம்மா இதுதொடர்பாகப் பேசுகையில், ``என்னுடைய குழந்தை தைரியமான மனத்துடன் பிறந்துள்ளது. இசபெல்லா 20-ம் தேதிதான் பிறக்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தினர். ஆனால், அவளுக்கான நாளை அவளே தேர்ந்தெடுத்து, தனது ஆளுமையையும் வெளிப்படுத்தியிருக்கிறாள்" எனக் குறிப்பிட்டள்ளார்.

பிறந்து சில நாள்களிலேயே பலரின் இதயங்களைக் கவர்ந்த இசபெல்லாவுக்கு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ISABELLA, BRAZIL, RIO DE JANEIRO, ANGRY BABY, STUNNING LOOK, PHOTOGRAPH