Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top

"34 வருஷம் சிறை".. லீவுக்கு வீட்டுக்குப்போன சவூதி மாணவிக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை.. உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சவூதி அரேபியாவில் மாணவி ஒருவருக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"34 வருஷம் சிறை".. லீவுக்கு வீட்டுக்குப்போன சவூதி மாணவிக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை.. உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.!

Also Read | மும்முரமாக பேசிய போப்.. ஆர்வமா பக்கத்துல போன "குட்டி விருந்தாளி".. சுத்தி இருந்தவங்களுக்கு சர்ப்ரைஸ்..!

தண்டனை

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவை சேர்ந்தவர் சல்மா அல்-ஷெஹாப். இவர் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வை மேற்கொண்டு வந்தார். விடுமுறைக்காக சவூதி திரும்பிய அவர் பொது அமைதி, சிவில் மற்றும் தேசிய பாதுகாப்பை ட்விட்டர் மூலமாக சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு உதவியதாக சல்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அவருக்கு 3 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் சல்மா. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சிறப்பு தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சல்மாவுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேலும் 34 ஆண்டுகள் அவர் வெளிநாடுகளுக்கு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

A Saudi woman sentenced to 34 years in prison

மேல்முறையீடு

நீதிமன்ற பதிவுகளின் மொழிபெயர்ப்பில் ஷெஹாப் மீதான மற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் புதிய குற்றச்சாட்டுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதில், "பொது அமைதியின்மையை ஏற்படுத்த முயல்பவர்களுக்கு உதவுதல் மற்றும் அவர்களின் ட்விட்டர் கணக்குகளைப் பின்தொடர்வதன் மூலம் சிவில் மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைப்பவர்களுக்கு உதவுதல். மற்றும் அவற்றை மறு ட்வீட் செய்தல்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஷெஹாப், தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் எனவும் நீதிமன்ற அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பார் என சல்மாவின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். சல்மா இங்கிலாந்தில் இருந்து 2018-19 க்கு இடையில் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருக்கிறார். அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளை தன்னுடன் மீண்டும் இங்கிலாந்துக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தபோது, சவூதி அதிகாரிகள் அவரது ட்வீட்களை காரணம் காட்டி அவரை கைது செய்ததாக தெரிகிறது.

A Saudi woman sentenced to 34 years in prison

மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சவூதி அமைப்பு, மிக நீண்ட சிறைத்தண்டனைகளில் ஒன்றாக இதனை குறிப்பிட்டிருக்கிறது. மேலும், அவரை விடுதலை செய்யும்படியும் கோரிக்கை விடுத்திருக்கிறது. அதுமட்டும் இன்றி  The Freedom Initiative போன்ற மனித உரிமைகள் அமைப்புகள் சவூதி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Also Read | "இங்க இருந்த ஏரி எங்கப்பா".. 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. உலக புகழ்பெற்ற ஏரியை கண்ணீருடன் கடக்கும் சுற்றுலாவாசிகள்..!

SAUDI, SAUDI WOMAN, PRISON

மற்ற செய்திகள்