VIDEO: 'சிட் அப்ஸ் பண்ற இடமா அது...' 'என்ன தான் உடல் மேல அக்கறை இருந்தாலும்...' 'அதுக்காக இப்படியா...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்உடல் மேல் அக்கறை உள்ளவர்கள் பல்வேறு வகையான உடற்பயிற்சி செய்வது வாடிக்கையான ஒன்று.
தினசரி உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுக்கோப்புடன் உடலை வைத்திருப்பது நல்ல பழக்கம் தான். சிலர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வார்கள். சில பேர் மைதானத்தில் சென்று உடற்பயிற்சி செய்வார்கள். இன்றைய அவசர காலகட்டத்தில் பலபேர் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வார்கள்.
ஆனால் சீனாவில் ஒரு மனிதர், இவை அனைத்தையும் மிஞ்சும் அளவிற்கு ஆபத்தான இடத்தில் உடற்பயிற்சி செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் செங்டு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்கு சாலையோரம் இருந்த மின் கம்பம் ஒன்றில் திடீரென கடகடவென ஏறத் தொடங்கியுள்ளார். மின்கம்பத்தின் உச்சிக்குச் சென்ற அவர், சிட் அப்ஸ் செய்யத் தொடங்கியதும், சுற்றி நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிட் அப்ஸ் பண்ண வேறு இடமே கிடைக்கவில்லையா என அனைவரும் அவரை ஆச்சரியத்துடன் பார்க்கத் தொடங்கினர்.
அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலர் , மின்சாரத்துறை ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்க, அந்த அடையாளம் தெரியாத மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செங்டு பகுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10 ,000 வீடுகளை சேர்ந்தவர்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். தகவல் அறிந்து வந்த செங்டு போலீசார், ஆர்வக்கோளாறில் மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் , வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகத் தொடங்கியது. மேலும் இது போல் ஆபத்தான விளையாட்டை இனிமேல் யாரும் ஈடுபடக்கூடாது என போலீசார் பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்தனர்.
மற்ற செய்திகள்