சீனாவில் பரவும் 'ஹன்டா' வைரஸ்...! 'மனிதர்களை தாக்கும் இந்த வைரஸினால் ஒருவர் மரணம்...' சீனாவிற்கு ஏற்பட்டுள்ள அடுத்த தலைவலி...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸை அடுத்து சீனாவில் பரவும் ஹண்டா வைரசால் சீனா மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவில் பரவும் 'ஹன்டா' வைரஸ்...! 'மனிதர்களை தாக்கும் இந்த வைரஸினால் ஒருவர் மரணம்...' சீனாவிற்கு ஏற்பட்டுள்ள அடுத்த தலைவலி...!

கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தற்போது உலக மக்களை வீட்டிற்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் சீனாவின் உஹான் மாகாணத்தில் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு  பரவியது. மனிதனில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரசால் இது வரை சுமார் 16000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இதுவரை இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனோவின் குரூர ஆட்டம் முடிவடையாத இந்த சூழலில், மீண்டும் சீனாவில் ஹன்டா வைரசால் ஒருவர் பலி ஆகியுள்ளார்.

சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது, ஒருவர் இறந்தார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பஸ்ஸில் பயணித்த 32 பேரையும் மருத்துவர்கள் சோதித்தனர்.

ஹண்டா வைரஸ் தற்போது பிரான்சிலும் பரவி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் பிரான்சில் இருக்கும் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அந்த பகுதியில் இருக்கும் அனைத்து ஓட்டல்கள், பார்கள், கிளப்புகள் மூடப்பட்டன. மேலும் இந்த வைரஸ் பிற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வைரஸானது எலிகளை மட்டும் தாக்கும் பண்புடையது எனவும், பிற விலங்குகளை இந்த வைரஸ் தாக்காது.  மேலும் இது மனிதர்களை தாக்கும். எலிகளிலிருந்து வெளிவரும் சிறுநீர், எச்சில், மலம் ஆகியவற்றின் வழியாக மனிதர்களுக்கு பரவும்.

ஹண்டா வைரஸ்  தாக்கியவர்களுக்கு முதலில் காய்ச்சல், குளிர், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிறு வலி இருக்கும். மேலும் இதன் தாக்கத்தை ஆரம்பித்தில் கண்டுபிடிப்பது கடினம். பத்து நாட்களுக்குப் பின்னரே தெரிய வரும். கொரோனா வைரஸ் போல ஹண்டா வைரசும் முதலில் நுரையீரலைத் தாக்கும். பின்னர் ரத்த நாளங்களுக்குள் செல்லும்.

மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் ஹண்டா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு  பரவாது.

தற்போது இந்த வைரஸ் தாக்குதலும் சீனாவுக்கு தலைவலியாக அமைந்துள்ளது.

 

CHINA, HANTA