தலையில் 'அறுவை சிகிச்சை' நடந்த போது... 'செய்ற வேலையா இது...' 'வைரல் புகைப்படம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்த ஜிம் மர்பி என்பவர், தனக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்த போது, செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்து அதை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ‘வாட்ஸ்-அப்’மூலம் பகிர்ந்து கொண்டார்.

தலையில் 'அறுவை சிகிச்சை' நடந்த போது... 'செய்ற வேலையா இது...' 'வைரல் புகைப்படம்...'

இங்கிலாந்து நாட்டில் ஜிம் மர்பி என்ற 54 வயது நபர், மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் ஹல் ராயல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுமார்  5 மணி நேரத்துக்கு மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

பொதுவாக மனித உடலில் வலி உணர்வற்ற உறுப்பு என்றால் அது மூளை தான். எனவே மூளை அறுவை சிகிச்சையின் போது, உணர்வு மறந்து போகும் அளவுக்கு நோயாளிக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை. எனவே அறுவை சிகிச்சையின் போது நோயாளி நல்ல உணர்வுடன் மருத்துவர்களுடன் பேசிய படி இருப்பார். நோயாளியின் பயத்தை போக்க அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்யவும் மருத்துவர்கள் அனுமதிப்பார்கள்.

அந்த வகையில், மர்பி அறுவை சிகிச்சையின் போது செல்ஃபோன் உபயோகிக்க மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர். அவர் தனக்கு நடந்த அறுவை சிகிச்சையை தனது செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்து அதை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ‘வாட்ஸ்-அப்’மூலம் பகிர்ந்து கொண்டார். முதலில் அதைப் பார்த்த யாருமே நம்பவில்லை.

இதுபற்றி அவர் கூறுகையில், “அறுவை சிகிச்சையின் போது நம்பிக்கையாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். அதனால் விழித்திருந்தேன். அறுவை சிகிச்சையை நான் ரசித்தேன். அறுவை சிகிச்சை கருவிகளின் சத்தத்தை மூழ்கடிக்க நான் இசை கேட்டேன். நண்பர்களுடன் பேசினேன்” என்றார். மர்பியின் இந்த மூளை அறுவை சிகிச்சை ‘செல்பி’ படம், சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

TRENDING NEWS

மற்ற செய்திகள்