'கிளிகளை தாக்கும் புதிய வைரஸ்...' 'என்ன வைரஸ்னே தெரியல...' 'பொத்து பொத்துன்னு செத்து விழுது...' 'இதுவும் கொரோனா வைரஸ் மாதிரி தான்...' பல அதிர்ச்சி தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா போலவே புதுவித வைரஸ் பாதிப்பதால் பறக்கும் போதே, கீழே பொத்தென்று விழுந்து இறக்கும் நூற்றுக்கணக்கான கிளிகள். அதிர்ச்சியில் ஆஸ்திரேலிய மக்கள்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலால் சிக்கலில் இருக்கும் ஆஸ்திரேலியாவில், கடந்த சில வாரங்களாக அதன் பிரிஸ்பேன் நகரின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான வானவில் கிளிகள், வானில் பறந்து கொண்டிருக்கும்போதே, திடீரென கீழே விழுந்து இறக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் இறந்த போன கிளிகளை ஆராய்ச்சி செய்தலில் பல அதிர்ச்சிகரமான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிபித் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் டேரில் ஜோன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இதுவரை இறந்த அனைத்தும் கிளிகளுக்கும் புதுவிதமான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வைரஸ் பாதிக்கப்பட்ட கிளிகள், பிற கிளிகளுடன் சண்டையிடுவதாலும், கடிப்பதாலும் மற்ற கிளிகளுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. மேலும் கிளிகளுக்கிடையே பரவும் இந்த புது வைரஸ் கொரோனா வைரஸ் போன்றதே ஆகும் எனவும், இதுவும் கொரோனா போன்று கிளிகளின் உடலில் ஒவ்வொரு பாகமாக பரவி, இறுதியில் நுரையீரலுக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என அதிர்ச்சிகரமான செய்தியை கூறினார்.
இதையடுத்து வைரஸ் பாதித்த கிளிகளால் மரக்கிளைகளில் அமர முடிவதில்லை எனவும், எனவே தான் அவை வானில் பறக்கும்போதே மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கீழே விழுந்து இறந்து விடுகின்றன எனவும் கூறினார். மேலும் இந்த புதுவிதமான வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் சூழல் உள்ளதா எனவும் ஆராய்ந்து வருவதாககும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸே குறையாத இக்கட்டான இந்த காலகட்டத்தில் மேலும் புதுவித வைரஸ் பறவைகளிடம் பரவி வருவதால் மேலும் பீதியில் ஆழ்ந்துள்ளனர் ஆஸ்திரேலியா மக்கள்.