'கொரோனா' பீதி நமக்குத்தான்... 'செல்லப் பிராணிகளுக்கு' இல்லை... 'நாய்க்குட்டியை' இப்படியும் 'வாக்கிங்' கூட்டிச் செல்லலாம்... 'இளைஞர்' வெளியிட்ட 'வைரல் வீடியோ'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பீதியால் உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் வேலையில், சைப்ரஸ் நாட்டில் தனது நாய்க்குட்டியை வாக்கிங் கூட்டிச் செல்ல ஒருவர் ட்ரோனை பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பேண்டமிக் வகையைச் சார்ந்தது என் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது இவ்வகை வைரஸ்கள் மிக வேகமாக, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவக்கூடிய தன்மை கொண்டது.
இதனால் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு நோய்த் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதே சாலச்சிறந்தது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பல்வேறு நாடுகளின் அரசு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. பெரும்பாலானோர் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்த வைரஸ் மனிதர்களிடம் மட்டுமே பரவும் தன்மை கொண்டது. விலங்குகளையோ, பறவைகளையோ இந்த வைரஸ் தொற்றுவதில்லை. எனவே அவற்றின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என்ற நோக்கத்தில், சைப்ரசை சேர்ந்த வகிஸ் டெமிட்ரி (Vakis Demetriou) என்பவர் தனது நாய்க் குட்டியை வாக்கிங் கூட்டிச் செல்வதற்கு சிறிய வகை பறக்கும் ட்ரோனை பயன்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை தனது ஃபேஸ் புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். கடந்த மார்ச் 18ஆம் தேதி வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் பறக்கும் ட்ரோன் ஒன்றில் கயிறு மூலம் நாய்க்குட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த ட்ரோனை டெமிட்ரி தனது வீட்லிருந்தே ரிமோட் மூலம் இயக்குகிறார். நாய்க்குட்டி சுதந்திரமாக ஆளில்லாத தெருவில் வலம் வருகிறது. இந்த வீடியோவை பின்பு ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
Dog walking by drone ... mildly amusing pic.twitter.com/F6EvA0UQpO
— David (@DavidWi73610764) March 19, 2020
"5 வது நாள் தனிமைப்படுத்தல். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், ஆனால் உங்கள் நாயை மறந்துவிடாதீர்கள்" என்ற வாசகங்களுடன் வரும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, த நியூயார்க் டெய்லியில் வெளியாகி பிரபலமானது.
தற்போது வரை இந்தவீடியோவை 36 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.