நான் உனக்கு அம்மா மாதிரி இருப்பேன் டா...! மனதில் நின்ற காதலியே 'சித்தியாக' வரும்போது... - ஒரு காதலனுக்கு இப்படி எல்லாம் கூடவா சோதனை வரும்...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

டிக்டாக் பிரபலம் ஒருவர் தன் காதலனின் தாய் இறந்த காரணத்தினால் தாய் பாசம் கிடைக்க வேண்டும் என காதலி எடுத்த முடிவு இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

நான் உனக்கு அம்மா மாதிரி இருப்பேன் டா...! மனதில் நின்ற காதலியே 'சித்தியாக' வரும்போது... - ஒரு காதலனுக்கு இப்படி எல்லாம் கூடவா சோதனை வரும்...?

டிக்டாக் பிரபலமான @ys.amri என்ற ஐடி பெயர் கொண்ட பெண் இளைஞர் ஒருவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண் காதலித்து வந்த காதலனின் அம்மா சில நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.

a man is upset bcoz girlfriend has become step mother

இந்த சம்பவம் தான் இந்த இளம் ஜோடிகளின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே ஆண்கள் தனக்கு வரப் போகும் மனைவி தன்னை தன்னுடைய அம்மா போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என எண்ணுவார்கள். ஆனால், இவர்களின் கதையில் காதலியே அம்மாவாக மாறிய சம்பவம் நடந்துள்ளது.

a man is upset bcoz girlfriend has become step mother

இதுகுறித்து தன் இணையதளத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண். 'என் காதலரின் அம்மா சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். என்னுடைய காதலர் அவரின் தாயார் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.

a man is upset bcoz girlfriend has become step mother

ஆனால் அவரின் தாய் இறந்த பின் அந்த துக்கத்தை என் காதலானால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவர் முன்பு போல் இல்லை, எப்போதும் சோகமாகவே இருந்தார். என் காதலன் தாய் பாசத்தை இழந்து கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை.

இந்த சமூகத்தை மறந்து நான் துணிந்து ஒரு முடிவு எடுத்தேன். என் காதலனுக்கு அவர் இழந்த தாய் பாசத்தை கொடுக்க உண்மையான தாயாகவே மாற திட்டமிட்டேன்.

இதற்காக என் காதலனின் தந்தையிடம் பேசி அவரை திருமணம் செய்து கொண்டேன். என் காதலன் இழந்த தாய் பாசத்தை நான் மீண்டும் கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு அவரின் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம்' என பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் இப்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு காதலனும் தன்னுடைய காதலியிடம் நீ எனக்கு இன்னொரு அம்மாவாக இருப்பாயா என்று தான் கேட்பார்கள். ஆனால் அதை நிறைவேற்ற இந்த பெண் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மற்ற செய்திகள்