'கொரோனா டெஸ்ட் எடுக்க வந்தது ஒரு குத்தமா'?... 'வாலு குழந்தையிடம் சிக்கிய டாக்டர்'... 'கடைசியா போட்டுச்சு பாருங்க ஒரு ஸ்டெப்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா டெஸ்ட் எடுக்க வந்த மருத்துவர் வாலு குழந்தையிடம் சிக்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.42 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 14.29 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.66 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இதற்கிடையே தினமும் கொரோனா குறித்த செய்திகள் நமது மனதிற்குக் கவலையை அளித்து வரும் நிலையில், இக்கட்டான நேரத்தில் உதவும் நல்ல உள்ளங்கள் மற்றும் சில நகைச்சுவையான சம்பவங்கள் மனதிற்குச் சற்று நிம்மதியை அளித்து வருகிறது. அந்த வகையில் இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் சிறுமி ஒருவருக்கு மருத்துவர் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்ய முயற்சி செய்கிறார்.
ஆனால் அந்த குழந்தை அதற்குச் சம்மதிக்காமல் வம்பு செய்கிறது. அதாவது குச்சியை மூக்கின் துவாரத்தில் விட்டு அந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும். ஆனால் மருத்துவர் எப்படி முயன்றும் நடக்கவில்லை. இறுதியில் ஒரு வழியாக மருத்துவர் அந்த குழந்தை சற்று அசந்த நேரம் பார்த்து குச்சியை மூக்கில் விட்டு எடுத்தார்.
உடனே அந்த குழந்தை வெற்றி களிப்பில் நாற்காலியிலிருந்து இறங்கி ஒரு நடன ஸ்டெப் ஒன்றைப் போட்டது. அப்போது மனதில் எந்த கவலை இருந்தாலும் அது நிச்சயம் மறந்து போகும் அளவிற்கு அந்த காட்சி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்